இந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்
Recommended Video
நியூயார்க்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது என்பது உள்விவகாரம் ஆகும் என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை வழங்கக் கூடிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கிவிட்டது. மேலும் காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்துவிட்டன.
இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் மாற்றங்கள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முறையிட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் சீனாவும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தது. மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை பெரும் கவலையளிப்பதாக சீனா "கவலை" அடைந்தது.

பாதுகாப்பு கவுன்சில்
இந்த நிலையில் நேற்றைய தினம் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை நடத்தப்பட்டது. சுமார் 15 நாடுகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்திய நிலையில் இது இந்தியாவின் உள்விவகாரம் என பாதுகாப்பு கவுன்சில் கூறிவிட்டது.

உள் விவகாரம்
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் ஐ.நாவுக்கான இந்திய நிரந்தர தூதர் சையது அக்பருதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 370 சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் இது முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம் ஆகும். இதில் வெளியாட்கள் யாரும் தலையிட முடியாது.

கையெழுத்து
யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட காஷ்மீர், லடாக் ஆகிய இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக அதன் தலைமை செயலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்கிறோம்.

இந்திய அரசு
ஜம்மு காஷ்மீருக்கு நல்ல ஆளுமை, வளர்ச்சியை ஊக்குவிக்கவே இது போன்ற முடிவை இந்தியா எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசு மற்றும் எம்பிக்களால் எடுக்கப்பட்ட முடிவாகும்.

பேச்சுவார்த்தை
இஸ்லாமாபாத்துக்கான இந்திய பிரதிநிதியாக நான் இருந்துள்ளேன். சாதாரணமாக இந்த விஷயத்தை கையாள பல வழிகள் உள்ள நிலையில் உங்கள் (பாகிஸ்தான்) லட்சியத்தை அடைய பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறீர்கள். பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் இறங்குங்கள்.
உலக நாடுகள்
காஷ்மீர் விவகாரத்தை பீதியை ஏற்படுத்தும் அளவுக்கு பெரிது செய்ய முயற்சிப்பவர்களுக்கு அங்குள்ள உண்மை நிலை தெரியாது. ஒரு நாடு ஜிகாத் என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்தியாவில் கலவரத்தை மேம்படுத்த முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. உலக நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது.

சீனாவின் கருத்து
தங்கள் கருத்துகளை எல்லாம் உலக நாடுகளின் எண்ணங்களாக பிரதிபலிக்க பாகிஸ்தானும், சீனாவும் முயற்சி மேற்கொண்டன. கடந்த 1972-ஆம் ஆண்டு கடைசியாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்ற வரலாறு தெரியும். நாங்கள் அதற்கு கட்டுப்படுகிறோம். அது போல் பாகிஸ்தானும் கட்டுப்பட வேண்டும். சீனாவின் கருத்தானது உலக நாடுகளின் கருத்து அல்ல என்றார் சையது .
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications