சுந்தர் பிச்சை, நாடெல்லாவை அடுத்து.. யூ டியூப் நிறுவன சிஇஓவாக தேர்வான இந்தியர் நீல் மோகன்! யார் இவர்
இவரின் வருகையை தொடர்ந்து யூ டியூபில் பல அதிரடி மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க்: யூ டியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சூசன் ஒஜிக்கி பணியில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் இந்த பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் சிஏஓவாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாடெல்லா ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் இன்னொரு இந்திய வம்சாவளியினரான நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து சிஇஓவாக பதவி ஏற்று வருகின்றனர். பல டெக் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் சிஇஓவாக இருக்கின்றனர்.

ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் வரை அதை சிஇஓவாக பராக் அக்ரவால் என்ற இந்திய வம்சாவளியினர்தான் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தற்போது யூ டியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சூசன் ஒஜிக்கி பணியில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் இந்த பதவிக்கு தேர்வாகி உள்ளார். மோகன் அமெரிக்காவின் பிரபல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இவர்?
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக சுந்தர் பிச்சை இருக்கும் நிலையில், அதே தாய் கழகத்தின் வீடியோ நிறுவனமான யூ டியூப் நிறுவனத்தின் சிஇஓவாக நீல் மோகன் தேர்வாகி உள்ளார். நீல் மோகன் 2008ல் கூகுளில் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்தே கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். 2012 சமயத்தில் இவர் யூ டியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015ல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியானார்.

பின்னணி என்ன?
யூ டியூப் செயலியில் பல மாற்றங்களை கொண்டு வந்ததில் இவர் பங்கு உள்ளது. முக்கியமாக அதன் கண்டன்ட் பாலிசி, தற்போது இருக்கும் தோற்றம், யூ டியூப்பில் ஷார்ட் வீடியோ கொண்டு வந்தது போன்ற பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டதில் இவரின் பங்கு முக்கியம் ஆகும். அதேபோல் தற்போது பிரபலமாகி வரும் யூ டியூப் டிவி, யூ டியூப் மியூசிக் கூகுள் நிறுவனத்தின் மிக முக்கியமான பெரிய தயாரிப்புகள் சிலவற்றின் வெளியீட்டில் முக்கிய பங்கு வகித்தவர் மோகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் டிசைனிங், கோடிங் என்று அனைத்திலும் மோகன் நேரடியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே பணியாற்றினார்
கூகுளில் வீடியோ விளம்பரத்தின் துணைத் தலைவராக எட்டு ஆண்டுகள் மோகன் பணியாற்றி உள்ளார். இங்கு இவரின் பனி கவனிக்கப்பட்ட நிலையில்தான் மோகன் தற்போது யூ டியூப் சிஇஓவாக பதவிஏற்றுள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் முன் நீல் மோகன் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பணிபுரிந்துள்ளார். அங்கே இவர் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த நிலையில் பின்னர் கூகுள் நிறுவனத்திற்கு மாறினார். ஸ்டிட்ச் ஃபிக்ஸ் மற்றும் மரபணு மாற்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனமான 23andMe என்று நிறுவனத்திலும் இவர் சில ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 2007ல் கூகுள் வாங்கிய DoubleClick நிறுவனத்தில் மோகன் பணியாற்றி உள்ளார். அங்கு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் இருந்தார். அந்த நிறுவனத்தை உருவாக்கியதில் இவரின் பங்கு முக்கியம் ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications