இன்று அல்லது நாளை! உலகப்போர் தொடங்குகிறது? ரெடியான ஈரான்.. கவசத்தை எடுத்த இஸ்ரேல்.. பதறிய அமெரிக்கா
நியூயார்க்: ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூள்வதற்கான ஆயத்தங்கள் நடந்து வருகின்றன. அப்படி போர் நடக்கும் பட்சத்தில்.. இது மிகப்பெரிய உலகப்போராக மாறும் அபாயங்கள் கூட உள்ளன.
இஸ்ரேல் பாலஸ்தீன போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவினர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மொத்தம் 800 பேர் வரை பலியாகினர்.

ஒன்று இணையும் அரபு நாடுகள்: இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று சேர தொடங்கி உள்ளன. சன்னி - ஷியா மோதல் காரணமாக பிரிந்து இருந்த சவுதி - ஈரான் கூட இஸ்ரேலை இந்த விவகாரத்தில் ஒன்றாக கண்டிக்க தொடங்கி உள்ளன. இஸ்ரேல் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அதன்படியே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த முடிவு செய்து உள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் மிக தவறானது.. மனித தன்மையற்றது.. இஸ்ரேலை உலக நாடுகள் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் செய்தது மிகப்பெரிய கொடுமை என்று சவுதி தெரிவித்துள்ளது . பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக சமீபத்தில்தான் அறிவித்தது. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.
உலகப்போர் மூளும் அபாயம்: சமீபத்தில் கூட ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் அவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 12 மணி நேரமாக நடந்த மீட்பு பணியின் முடிவில் அவர் மரணம் அடைந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின் இஸ்ரேல் இருப்பதாக கூறப்பட்டது.
அதோடு கடந்த 2 மாதங்களுக்கு முன் இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதில் என ஈரான் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் பாலஸ்தீன போர் தொடங்கி பல விஷயங்கள் இந்த மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்கு பழிவாங்கவே இஸ்ரேல் ஈரான் அதிபரை கொன்றதாக கூறப்பட்டது.
இது போக ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனிஹ் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த ஹமாஸ் அமைப்புதான் பாலஸ்தீனத்தில் போராடி வருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளது. சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் இதேபோல் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவை பெற்று இஸ்ரேலில் போர் செய்து வருகிறது. லெபனாலில் இருந்து இந்த அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்புதான் இஸ்ரேல் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளது.
போர் மூள்கிறது: தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு எதிராக "கடுமையான" பதிலடி கொடுப்பதாக ஈரான் சபதம் செய்துள்ளது. இஸ்ரேல் இதில் கருத்து தெரிவிக்கவில்லை. இன்று அல்லது நாளை பதிலடி தாக்குதல் நடத்துவோம்.. கண்டிப்பாக போர் நடத்துவோம்.. ஒன்றிரண்டு நாட்களில் தாக்குதலை நடத்தி போரை தொடங்குவோம் என்று அறிவித்துள்ளது ஈரான்.
இணையும் நாடுகள்: அரபு நாடுகளில் இருந்த பல்வேறு ஆட்சிகள், மன்னர் ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டதை அரபு வசந்தம் என்று மேற்கு உலகம் அழைக்கும். மேற்கு உலகத்தின் அரசியலுக்கு இது ஆதரவாக இருந்ததால் அதை உலக நாடுகள் அரபு வசந்தம் என்று அழைக்கும். அந்த அரபு வசந்தம் ஒரு வகையில் மத்திய கிழக்கில் பல்வேறு போருக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில்தான் ரியல் அரபு வசந்தம் என்று சொல்லும் விதமாக இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக இஸ்லாமிய நாடுகள் ஒரு புள்ளியில் இணைய தொடங்கி உள்ளன. இதனால் 3ம் உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
உலகப்போர் மூளும் அபாயம்: ஏற்கனவே கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.
ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு போர்களும் (இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்) நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும் - இந்தப் போர்கள் புதிய உலக ஆர்டரை உருவாக்கும் போராக மாற போகிறது. அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு போர்களும் போரில் ஈடுபட்டு உள்ள நாடுகளின் நட்பு நாடுகளுக்கும் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications