Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடியோவை லீக் பண்ணிடுவோம்.. டிரம்ப்பை மிரட்டி கட்டுப்படுத்துகிறது இஸ்ரேல்? வசமாக மாட்டிக்கிட்டாரு?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரான் மீது போர் தொடுக்க கூடாது என்று தீர்க்கமாக பேசி வந்தவர் அதிபர் டிரம்ப். அதிலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிடன், கமலா ஹாரிஸ் போன்றவர்கள் ஈரான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கூறி.. போர் செய்ய கூடாது என்ற கருத்தை முன் வைத்து வென்றவர் டிரம்ப். அதே டிரம்ப் இப்போது ஈரான் மீது போர் தொடுக்க தயாராகி வருகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் அளித்து உள்ளாராம். நேற்று நடந்த தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டத்தில் அவர் இந்த தனிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் அவர் போட்ட இந்த "பர்சனல்" திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது,

usa america new york

ஈரான் அணு ஆயுத திட்டத்தை கைவிடுகிறதா என்று பார்த்துவிட்டு அதன்பின் தாக்குதல் நடத்தலாம் என அவர் முடிவு செய்துள்ளார். அதோடு காங்கிரஸ் ஒப்புதல், அதாவது நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் டிரம்ப் இந்த தாக்குதலை நடத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது


ஈரான் அமெரிக்கா டிரம்ப்:

ஈரான் மீது டிரம்ப் போர் தொடுக்கும் அளவிற்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்க காரணங்கள் உள்ளன. எப்ஸ்டீன் லிஸ்டை வைத்து இஸ்ரேல் டிரம்பை மிரட்டுவதாக புகார்கள் உள்ளன. எப்ஸ்டீன் லிஸ்டில் டிரம்ப் பெயர் உள்ளதாக புகார்கள் வருகின்றன. சமீபத்தில் மஸ்க் கூட இந்த புகாரை வைத்திருந்தார். இந்த எப்ஸ்டீன் லிஸ்டை வைத்தே டிரம்ப்பை இஸ்ரேல் வழிக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

சர்ச்சைக்குரிய லிஸ்ட்

அமெரிக்காவில் வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த "பலான லிஸ்டில்" சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன எப்ஸ்டீன் லிஸ்ட்? அந்த நாட்டையே இந்த லிஸ்ட் உலுக்க என்ன காரணம்?

ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் அமெரிக்காவை சேர்ந்த பிஸ்னஸ் மேன். விர்ஜின் தீவில் இவர் சில நிதி நிர்வாகம் தொடர்பான நிறுவனங்களை நடத்தி வந்தார். அந்த நாட்டு நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் . எப்ஸ்டீன் விர்ஜின் தீவில் தனக்கு என்று தனியாக ஒரு தீவு வாங்கி.. அங்கே பெரிய மாளிகை கட்டி.. அதில் பல பெண்கள் மற்றும் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் பல பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவர்களுக்கு "சேவைகளை" வழங்கி உள்ளார். முக்கியமாக சிறுமிகளை சப்ளை செய்துள்ளார்.

யார் இவர்?

இதற்காக அவர் ஒரு "கல்ட்" குழுவை உருவாக்கியதோடு.. கிளப் போல இதை நடத்தி அடிக்கடி அங்கே பிரபலங்களை வரவழைத்து சிறுமிகளை சித்திரவதை செய்துள்ளார்.

இதை பல ஆண்டுகளாக இவர் எந்த பிரச்சனையும் இன்றி செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் 2005 ஆம் ஆண்டில், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள போலீசார், எப்ஸ்டீனை கைது செய்தனர் . தனது 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர் தெரிவித்த புகார் ஒன்றை அடுத்து, அவரை விசாரிக்கத் தொடங்கினர்.

எப்ஸ்டீன் லிஸ்ட்

புளோரிடா மற்றும் நியூயார்க்கில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக எப்ஸ்டீன் மீண்டும் ஜூலை 6, 2019 அன்று கைது செய்யப்பட்டார். அவர் ஆகஸ்ட் 10, 2019 அன்று அவரது சிறை அறையிலேயே மர்மமாக இறந்தார். அவரது மரணத்திற்கு காரணம் தூக்குப்போட்டு தற்கொலை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் எப்ஸ்டீனின் வழக்கறிஞர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்.. மரணத்திற்கான உண்மையான காரணத்தை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

எப்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 14 வயதுக்குட்பட்ட முப்பத்தாறு சிறுமிகளை ஃபெடரல் அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் கோர்ட் விசாரணையின் போது எப்ஸ்டீன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் 2008 ஆம் ஆண்டில் புளோரிடா மாநில நீதிமன்றத்தால் இவர் குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் இரண்டு குற்றங்களுக்காக மட்டுமே அவர் தண்டிக்கப்பட்டார். கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் காவலில் இருந்தார். அதன்பின் விடுதலையும் ஆனார். விரைவில் இந்த லிஸ்ட் வெளியாக உள்ளது.

என்ன நடந்தது?

இவரின் இருந்த "கஸ்டமர்கள்" லிஸ்ட்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதன் இரண்டாவது லிஸ்ட் தற்போது நியூயார்க் கோர்ட்டில் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த "பலான லிஸ்டில்" சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளிண்டன், பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹாலிவுட் நட்சத்திரம் லியோனார்டோ டிகாப்ரியோ, மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

கிரேட் பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இரண்டாவது மகன் இளவரசர் ஆண்ட்ரூ,
பில் கிளிண்டன், முன்னாள் அமெரிக்க அதிபர்
ஹிலாரி கிளிண்டன், பில் கிளிண்டனின் முன்னாள் முதல் பெண்மணி
டேவிட் காப்பர்ஃபீல்ட், அமெரிக்க பிரபலம்
ஆலன் டெர்ஷோவிட்ஸ், வழக்கறிஞர்
டைட்டானிக் படத்தில் நடித்து பிரபலமானவர் லியோனார்டோ டிகாப்ரியோ
அல் கோர், முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி
ஸ்டீபன் ஹாக்கிங், புகழ்பெற்ற தத்துவார்த்த இயற்பியலாளர்
எஹுட் பராக், முன்னாள் இஸ்ரேலிய பிரதமர்
"கிங் ஆஃப் பாப்" என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன்.
மார்வின் மிங்க்சி, செயற்கை நுண்ணறிவு முன்னோடி
கெவின் ஸ்பேசி, அமெரிக்க நடிகர்
ஜார்ஜ் லூகாஸ், அமெரிக்க திரைப்பட இயக்குனர்
கேட் பிளான்செட், ஆஸ்திரேலிய நடிகர்
நவோமி காம்ப்பெல், பிரிட்டிஷ் மாடல்
ஷரோன் சர்ச்சர், பிரிட்டிஷ் பத்திரிகையாளர்
புரூஸ் வில்லிஸ், ஓய்வுபெற்ற அமெரிக்க நடிகர்
பில் ரிச்சர்ட்சன், நியூ மெக்சிகோவின் முன்னாள் கவர்னர்
கேமரூன் டயஸ், அமெரிக்க நடிகை
க்ளென் டுபின், அமெரிக்க முதலீட்டாளர்
நோம் சாம்ஸ்கி, மொழியியலாளர் மற்றும் அரசியல் தத்துவவாதி
டாம் பிரிட்ஸ்கர், அமெரிக்க அதிபர்
கிறிஸ் டக்கர், அமெரிக்க நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர்
சாரா பெர்குசன், யார்க்கின் டச்சஸ், இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி
ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், அமெரிக்க அரசியல்வாதி

உள்ளிட்ட பலர் இந்த லிஸ்டில் சிக்கி உள்ளனர். பிளாக்மெயில் செய்ய வேண்டும், எதிர்காலத்தில் உதவும் போன்ற குற்ற நோக்கங்களுக்காக இந்த பிரபலங்கள் மேற்கொள்ளும் பாலியல் செயல்பாடுகளை பதிவு செய்ய எப்ஸ்டீன் தனது தீவு முழுக்க பல இடங்களில் மறைக்கப்பட்ட கேமராக்களை பயன்படுத்தி வந்துள்ளார். .இந்த வீடியோ ரெக்கார்டர்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+