ஒரு ஏவுகணையை கூட தடுக்க முடியல.. மழை போல கொட்டும் ஈரான் மிஸல்கள்.. திக்கி திணறும் இஸ்ரேல்.. வீடியோ
டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களை தடுக்க முடியாமல் இஸ்ரேல் கடுமையாக திணறி வருகிறது. இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதில் இஸ்ரேல் ஈரான் ஏவுகணைகளை தடுக்க முடியாமல் உறைந்து போய் நிற்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
கடுமையான அட்டாக்
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் முற்றி உள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக நேற்று இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் சாதாரணமாக செய்யவில்லை. முறையாக திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இது வெறுமனே கோபத்தில் கொடுக்கப்பட்ட பதிலடி அல்ல.
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. முக்கியமாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இங்கே ஏற்பட்ட சேதங்கள் பகல் நேர வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆரம்ப கட்ட தகவல்களின்படி, ஹைஃபாவில் உள்ள ஒரு ஜெப ஆலயம் சேதமடைந்துள்ளது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள பென் குரியன் விமான நிலையமும் கடுமையாக சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் திணறுகிறது
ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறமை இஸ்ரேலுக்கு இருந்தாலும், பாதுகாப்புக்கான செலவுகள் அதிகரித்திருப்பது அந்நாட்டிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த நாடு போரில் அடுத்த 10-15 நாட்கள் தாக்குபிடிப்பதே சிரமம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏவுகணையை இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு ஏறக்குறைய 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது. ஒரு இரவிற்கு மட்டும் இஸ்ரேலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 285 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இஸ்ரேல் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களை தடுக்க முடியாமல் இஸ்ரேல் கடுமையாக திணறி வருகிறது. இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதில் இஸ்ரேல் ஈரான் ஏவுகணைகளை தடுக்க முடியாமல் உறைந்து போய் நிற்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
இப்போதே இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. விரைவில், எந்த ஏவுகணைகளை இடைமறிப்பது.. எந்த ஏவுகணையை தாக்க அனுமதிப்பது என்ற கடுமையான முடிவை இஸ்ரேல் எடுக்க வேண்டியிருக்கும்.. என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
தோற்ற அயர்ன் டோம்
ஈரான் புரட்சிகரப் படையினர் கூறுகையில், இதில் புதிய முறையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளோம். பொதுவாக நாங்கள் அனுப்பும் ஏவுகணைகளை இஸ்ரேலின் அயர்ன் டோம் மரிக்கும். அல்லது மற்ற ஏவுகணை தடுப்பு அமைப்புகள் தடுத்து தாக்கும்.
🇮🇷🇮🇱| Look how many interceptor missiles were launched (17) in Holon, Tel Aviv, yet the Iranian missile evaded all defenses and still hit its intended target. pic.twitter.com/sofkOGGC7S
— Arya - آریا (@AryJeay) June 19, 2025
ஆனால் இந்த முறை நாங்கள் வித்தியாசமான முறையில் தாக்குதல் நடத்தி உள்ளோம். சில ரேடார் நுட்பங்கள், புதிய முறைகளை பயன்படுத்தி உள்ளோம். அதேபோல் ஹீட் சென்சார்கள், ரேடார் தகவல்களை வைத்து இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளை குழப்பி உள்ளோம். இதனால் அயர்ன் டோம் எங்களின் ஏவுகணையை தாக்க வந்தால்.. அந்த அயர்ன் டோம் ஏவுகணையை இஸ்ரேலின் நாட்டின் வேறு ஒரு ஏவுகணை தாக்கி அழிக்கும்.
அதாவது.. இஸ்ரேல் தனது சொந்த நாட்டு ஏவுகணை அமைப்புக்கு உள்ளேயே மாறி மாறி தாங்கிக்கொள்ளும் விதமாக குழப்பி உள்ளோம். தங்களின் சொந்த நாட்டு ஏவுகணை தடுப்பு அமைப்புகள் செயல்பட்டால் அதை அவர்களின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளே தாக்கி அழிக்கும். அதாவது கேன்சர் போல. நல்ல செல்களையும் கேன்சர் அழிப்பது போல.. அவர்களுக்கு உள்ளேயே குழம்பி தாக்கிக்கொள்வார்கள்.
இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றுக்கொன்று இலக்காகித் தாக்கும்படி செய்ததால் எங்களால் பல இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்க முடிந்தது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இஸ்ரேலின் "அயர்ன் டோம்" பாதுகாப்பு அமைப்பு 100% வெற்றிகரமானது அல்ல என்று இதன் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது.
-
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications