Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

56 வருஷ போராட்டம்.. ஹமாஸுக்கு ஆதரவாக வந்து விழுந்த வார்த்தை! ஐநா பொது செயலாளரை குறி வைத்தது இஸ்ரேல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: காசா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், காரணம் இல்லாமல் ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தவில்லை எனவும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் கூறியிருந்தார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

Israel urges UN Secretary General António Guterres to step down

இதற்கு எதிராக இஸ்ரேல், காசா மீது கடந்த 18 நாட்களாக வான்வழி தாக்குதலை தொடுத்திருக்கிறது. குறிப்பாக இந்த தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 704 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,360 குழந்தைகள் உட்பட 5,791 பேர் உயிரிழந்துள்ளனர். 15,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். காசா என்பது ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு நடுவே இருக்கும் ஒரு துண்டு நிலமாகும். இது மொத்தமாகவே சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும்தான் இருக்கும். இதில் சுமார் 23 லட்சம் பாலஸ்தீன மக்கள் வாழ்கின்றனர்.

இந்த பகுதிக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் என எது வரவேண்டும் என்றாலும் இஸ்ரேலின் அனுமதியில்லாமல் வர முடியாது. இந்நிலையில் போரை காரணமாக கூறி இந்த பகுதிக்கான அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. இதுவரை கைவசம் இருந்த எரிபொருளை கொண்டு ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்து வந்த காசாவின் மருத்துவமனைகளில் தற்போது எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்து போய் இருக்கிறது. எனவே காசாவின் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.

மறுபுறம் இஸ்ரேலுக்கு எதிராக வலுவான குரல்கள் ஒலித்து வருகின்றன. குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதன் பொது செயலாளர், இஸ்ரேலை கடுமையா விமர்சித்துள்ளார். இஸ்ரேல், பாலஸ்தீனம் பிரேஸில், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றிருந்த மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், "இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. சர்வதேச மனித உரிமை சட்டம் இந்தப் போரில் மீறப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. சர்வதேச சமூகம் இதற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும்.

காசா ஐ.நா முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 6 லட்சம் பாலஸ்தீனர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தவே பாதுகாக்கப்படுவதாக கூறுவது தவறு.10 லட்சத்துக்கும் அதிகமானோரை தெற்கு காசாவுக்கு பாதுகாப்பாக இடம் பெயர கூறிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டுகளை வீசுகிறது. கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு, வன்முறை, பொருளாதார நெருக்கடி, வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸின் திடீர் தாக்குதல் பயங்கரமானதாகும். அதற்காக பாலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவது நியாயப்படுத்த முடியாது. பாதுகாப்பான இஸ்ரேலும், ஐ.நா தீர்மானங்கள் மற்றும் முந்தைய ஒப்பந்தங்களின்படி சுதந்திரமான நாட்டை பாலஸ்தீனர்களும் காணவேண்டும்" என கூறியுள்ளார்.

குட்டரெஸின் இந்த கருத்துக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. குட்டரெஸ் இந்த கருத்துகளுக்காக பதவி விலக வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இலய் கோஹன் மற்றும் ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+