சான்ஸே இல்லை! விதிகளுக்குள் அடங்காத கேலக்சியை கண்டுபிடித்த ஜேம்ஸ் வெப்.. குழம்பிப்போன வானவியலாளர்கள்
இப்படி ஒரு கேலக்சி அங்கே இருக்க வாய்ப்பே இல்லை.. அதுவும் அந்த நிலையில் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
நியூயார்க்: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த ஒரு கேலக்சியின் புகைப்படம் வானவியல் ஆராய்ச்சியாளர்களை குழப்பி உள்ளது.
உலகம் முழுக்க பலரால் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு வெளியிடப்பட்டது. பல லட்சம் விண்மீன் மண்டலம், நட்சத்திரங்கள், கிரகங்களை படம் பிடித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பி உள்ளது
நாசா மற்றும் ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் கனடா ஆராய்ச்சி மையம் இணைந்து இந்த The James Webb Space Telescope (JWST) ஐ உருவாக்கி உள்ளது. Ariane flight VA256 ராக்கெட் மூலம் கடந்த 2021 வருடம் டிசம்பர் மாதம் விண்ணில் இந்த தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டது.

ஆராய்ச்சி
பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரம், கிரகங்கள், அண்டங்களை இது ஆராய முடியும். உலகம் தோன்றியது எப்படி என்று இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். எப்படி என்கிறீர்களா?உலகம் தோன்றிய தொடக்க காலத்தில் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்த நட்சத்திரங்கள், கிரகங்களிடம் இருந்து வெளியான ஒளிகள் இப்போதும் பல மில்லியன் ஒளி ஆண்டுகளை கடந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கும். இவற்றைதான் படம் பிடித்து ஜேம்ஸ் வெப் அனுப்ப முடியும். அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்க கூடியது. உலகின் தொடக்க காலத்தில் இருந்த பல கேலக்ஸிகளை கண்டுபிடிக்கவும் இது உதவும். அகச்சிவப்பு கதிர்கள் என்பதால் இதன் இமேஜ் துல்லியமாக இருக்கும். இந்த நிலையில்தான் உலகம் முழுக்க பலரால் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல லட்சம் விண்மீன் மண்டலம், நட்சத்திரங்கள், கிரகங்களை படம் பிடித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பி உள்ளது

புகைப்படம்
பூமியில் இருந்து அதிகபட்சம் 1,500,000 km தூரத்தில் இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பூமியில் இருந்து இது இருக்கும் குறைந்தபட்ச தொலைவே 374,000 km தூரம் ஆகும். இது முதல் முத்தலாக் 13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முன் உருவான முதல் பிரபஞ்ச கூட்டத்தில் இருந்து வெளியான ஒளியைத்தான் இந்த ஜேம்ஸ் வெப் படம் பிடித்துள்ளது. அதாவது 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த பிரபஞ்ச கூட்டத்தில் இருந்து வந்த போட்டான் துகள்கள் இவ்வளவு காலம் பயணித்து இப்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு கதிர்களில் படிந்து படமாகி உள்ளது. அதாவது பெருவெடிப்பிற்குப்பின் 400 - 500 மில்லியன் ஆண்டுகள் கழித்து பிரபஞ்சங்கள் உருவான போது குட்டியாக.. குழந்தையாக பிறந்த நட்சத்திரங்கள், நட்சத்திர தொகுப்புகள் அதாவது கேலக்சிகளின் புகைப்படங்களை இந்த ஜேம்ஸ் வெப் வெளியிட்டது.

தொடக்க காலம்
இது தொடக்க காலம் என்பதால்.. அந்த நட்சத்திரங்கள் எல்லாம் புதிதாக இருக்கும் என்பதையோ எளிதாக யூகிக்க முடியும். அதாவது ஜேம்ஸ் வெப் பதிவு செய்யும் 13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முந்தைய அந்த நட்சத்திரங்கள்.. அப்போது மிகவும் இளமையாக இருந்திருக்கும். ஜேம்ஸ் வெப்பும் முதலில் இளமையான கேலக்சிகளின் புகைப்படங்களைத்தான் அனுப்பியது. ஏனென்றால் அப்போதுதான் கேலக்சிகளே உருவாக தொடங்கியதால் கண்டிப்பாக இவை புதியதாகவே இருக்கும். புதியது என்பதை அதன் ஒளியை வைத்து கண்டுபிடிக்க முடியும்.

போட்டோ
ஆனால் இப்போது ஜேம்ஸ் வெப் அனுப்பி இருக்கும் சில புகைப்படங்கள் குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. பெயரிடப்படாத கேலக்சிகளின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் அனுப்பி உள்ளது. இதில் உள்ள நட்சத்திரங்கள் முதுமை அடைந்து, நட்சத்திரங்கள் அதிக நெருக்கமாக காணப்படுகிறது. நமது பால்வழி போல மிகவும் பெரிதாக காணப்படுகிறது. இதன் மூலம் எப்படி பெருவெடிப்பு நடந்த உடனேயே இவ்வளவு பழமையான நட்சத்திர தொகுப்பு உருவாகி இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த காலத்தில் இவ்வளவு பழைய நட்சத்திரங்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அந்த தியரியை உடைத்து போடும் அளவிற்கு ஜேம்ஸ் வெப் அனுப்பிய புகைப்படங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.

விளக்கம்
அதாவது பெருவெடிப்பிற்கு பின் நட்சத்திரங்கள் உருவாக்க 400 மில்லியன் ஆண்டுகள் ஆனது. தற்போது ஜேம்ஸ் வெப் படம் பிடிக்கும் நட்சத்த்திரங்கள் எல்லாம் அவை பிறந்த காலத்தில் இருந்த தோற்றம். அதாவது 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன். இதனால் அவை எல்லாம் இளமையாக இருக்கும். ஆனால் இந்த ஒரு கேலக்சி மட்டும் வயது முதிர்ந்து முதுமையாக காணப்படுகிறது. பொதுவாக இளமையான நட்சத்திரங்கள் நீல நிறத்தில் எரியும். முதுமை அடைய அடைய சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் காரணம் ஒளி மங்குவதே. இதை வைத்தே நட்சத்திரங்களின் வயதை கணிப்பார்கள். தற்போது ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த கேலக்சி நட்சத்திரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் வயதான நட்சத்திரங்கள் ஆகும்,. இப்படி ஒரு கேலக்சி அங்கே இருக்க வாய்ப்பே இல்லை.. அதுவும் அந்த நிலையில் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்... அப்படி என்றால் பிக்பேங்க் நடந்ததும் நட்சத்திரங்கள் உருவானதா அல்லது அதற்கு முன்பே பேரிருளுக்கு முன் நட்சத்திரங்கள் இருந்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications