பாருங்க 2 நாளில் எல்லாம் மாறிடுச்சு.. கமலா தோற்ற உடனே.. ஜோ பிடன் செயலில் மாற்றம்.. மாஸ்டர்பிளான்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் துணை அதிபர் கமலா ஹாரிஸ் படுதோல்வி அடைந்துவிட்டார். ஒரு கவுண்டியில் கூட டிரம்ப்பை முந்த முடியாமல் மிக மோசமான தோல்வியை சந்தித்து உள்ளார் கமலா ஹாரிஸ்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 295 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை வென்றுள்ளார்.

நவேடா, அரிசோனா முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அதோடு அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்குகள் அடிப்படையில் கமலா ஹாரிஸ் 7,03,45,377 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் டிரம்ப் 7,42,47,470 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு சதவிகித அடிப்படையில் 47 9 சதவிகித வாக்குகளை கமலா ஹாரிஸ் வென்றார். இன்னொரு பக்கம் டிரம்ப் 51 சதவிகித வாக்குகளை வென்றுள்ளார். மக்கள் வாக்கு அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் குடியரசு கட்சி முதல்முறை ஜனநாயக கட்சியை முந்தி உள்ளது. அதாவது எலக்ட்ரல் வாக்கு தாண்டி மக்களின் மொத்த வாக்கிலும் டிரம்ப் இந்த முறை சாதனை செய்துள்ளார்.
பிடன்: இந்த தேர்தல் காலம் முழுக்க ஜோ பிடன் கமலா ஹாரிஸுக்கு வாக்கு சேகரிக்கவில்லை. முதலில் அதிபர் தேர்தலில் இவர்தான் போட்டியிட்டார். அதன்பின் வயோதிகம், உடல் பிரச்சனை காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அப்போதும் கூட போட்டியில் இருந்து இவர் விலகவில்லை.. கமலா ஹாரிஸ் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இவர் விலகினார்.
பிடன் இந்த அறிவிப்பை கூட தொலைக்காட்சி மூலம் செய்யவில்லை. அறிக்கை மூலமே செய்தார். இதை எல்லாம் வைத்து கமலா ஹாரிஸ் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக கமலா ஹாரிஸ் பிடனை இயக்குகிறார் .. அவரை மிரட்டுகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதற்கு பின் பெரிய சதி நடந்து இருப்பதாக அமெரிக்கர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக எக்ஸ் தளத்தில் மட்டுமே கூறினார். அவர் நேரடியாக பேட்டியோ, பேச்சோ மேற்கொள்ளவில்லை. இதை எல்லாம் வைத்து அது பெரிய சதி என்று கூறப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் பிடன் இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு பேட்டி அளித்தார். நாம் தோல்வி அடைந்துவிட்டோம். இதற்காக துவண்டு போக கூடாது. பதவியில் இல்லை என்றாலும் மக்களுக்கு சேவைகளை தொடர வேண்டும் என்று பேசினார். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. பிடன் மிக மிக தெளிவாக பேசினார். இடை இடையே சிரித்தபடி இருந்தார். இத்தனை நாட்கள் அவர் பேச்சில் காணப்பட்ட குளறுபடிகள் நேற்று இல்லை.
இதை வைத்து பலரும்.. பிடன் இத்தனை காலம் நடித்தார் போல.. தன்னுடைய வாய்ப்பை பறித்த கமலா ஹாரிஸ் தோற்க வேண்டும் என்று பிடன் பேசவே முடியாதவர் போல நடித்தார். இப்போது கமலா ஹாரிஸ் தோற்ற உடன் பிடன் முகம் முழுக்க மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. இதற்கு முன் இருந்ததை விட அவர் மகிழ்ச்சியாக பேசுகிறார், என்று நெட்டிசன்கள் பலரும் போஸ்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications