எலும்பும் சதையுமாக இருந்த டைனோசர் கால்! அருகிலேயே பார்த்தால் குட்டி மீன்! அமெரிக்காவில் நடந்தது என்ன
நியூயார்க்: அமெரிக்காவில் எலும்பும் சதையுமாக டைனோசர் ஒன்றின் கால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களை இந்த கண்டுபிடிப்பு பல்வேறு காரணங்களுக்காக ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் வடக்கு டகோட்டா பகுதியில் இருக்கும் டானிஷ் என்ற பகுதி பண்டைய கால ஆராய்ச்சிக்கு பெயர் போனது. அதாவது டைனோசர் கால படிமங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தீவிரமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு சுற்றி சுற்றி பல கிலோ மீட்டருக்கு பாறைகள்தான் காணப்படும். ஆனால் அந்த பாறைகள்தான் பல்வேறு முக்கியமாக வரலாற்று தகவல்களை சுமந்து இருக்கின்றன.

டைனோசர்
இந்த பாறைகள் என்பது Chicxulub விண்கல் பூமி மீது விழுந்த போது அதன் தாக்கத்தால் உருவான பாறைகள் ஆகும். இந்த விண்கல் மெக்சிகோவில் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் விழுந்தது ஆகும். இதுதான் மொத்தமாக டைனோசர்களின் அழிவிற்கு காரணமாக அமைந்தது. இதுவே மனித இனம் பின்பு தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. பண்டைய ஆறான டேனிஸ் ஆற்றின் நினைவாக இந்த பகுதிக்கு டேனிஸ் என்று பெயர் வைக்கப்பட்டு அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விண்கல் விழுந்த இடம்
இந்த டேனிஸ் பகுதியில்தான் தற்போது டைனோசர் ஒன்றின் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாறைகளில் ஒடுங்கிய நிலையில் இந்த எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் என்ன வியப்பு என்றால் அந்த எலும்பை சுற்றி தோல், சதைகளும் இருந்து உள்ளன. பாறைகளுக்கு அடியே பல காலமாக இருந்தும் கூட இது அழியாமல் அப்படியே இருந்துள்ளது. அழகான கால்கள், கொடூரமான சொரசொரப்பான தோல்களுடன் இந்த படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்?
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பொதுவாக இங்கு கண்டுபிடிப்பட்ட டைனோசர் தடங்கள் எல்லாம் விண்கல் விழுவதற்கு முன் இறந்து போன டைனோசர் படிமங்கள்தான். ஆனால் இந்த ஒற்றை கால் மட்டும் சரியாக விண்கல் மோதி அதன் மூலம் ஏற்பட்ட அழிவால் பலியான டைனோசரின் கால் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அல்லது விண்கல் மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பலியான டைனோசராக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கால்
இப்படி சொல்ல காரணம் இருக்கிறது. அமெரிக்காவில் இந்த டைனோசர் உடலில் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங்கிங்கில் அவர் சரியாக 66 மில்லியன் வருடம் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு இதன் உடலில் சில படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை விண்கல்லில் இருந்து வந்த அந்நிய படிமங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக விண்கல் மூலம் பாதிக்கப்பட்டு பலியான டைனோசரின் கால் இதுவாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீன்
இது போக அதே பகுதியில் மீன்களும், ஆமைகளின் படிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அருகில் கடல் இல்லை என்றாலும் மெக்சிகோவில் விழுந்த விண்கல் காரணமாக ஏற்பட்ட சுனாமி அலைகள், வெள்ளம் காரணமாக இந்த மீன்கள் இப்படி பாறைகள் இருக்கும் பகுதிக்கு அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த மீன்களின் உட்பகுதியில் பாறை துகள்கள், வேறு சில துகள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆச்சர்யம்
இவைகளும் அந்நிய துகள்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை கார்பன் டேட்டிங் மூலம் சோதனை செய்ததில், அவையும் 66 வருடங்கள் பழமை வாய்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் மெக்சிகோவில் விழுந்த விண்கல் காரணமாக டேனிஸ் பகுதியில் சுகமாக... காற்று வாங்க போன.. டைனோசர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இதில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் மூலம் மேலும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications