அணு குண்டை வீசுங்கள்.. சரியாகிவிடும்.. புயல் தாக்குதலை தவிர்க்க டிரம்ப் சொன்ன ஐடியா.. அதிர்ச்சி!
புயல் தாக்குதலில் இருந்து அமெரிக்காவை காப்பாற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன ஐடியா ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
Recommended Video
நியூயார்க்: புயல் தாக்குதலில் இருந்து அமெரிக்காவை காப்பாற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன ஐடியா ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிபர் ஆனதில் இருந்தே நிறைய சர்ச்சையை சந்தித்து வருகிறார். அதிலும் அவர் கொடுக்கும் ஐடியாக்கள் எல்லாம் தாறுமாறு தக்காளி சோறு ரகமாகவே இருக்கிறது.
கிரீன்லாந்தை விலைகொடுத்து வாங்க வேண்டும், மெக்சிகோ எல்லையில் மொத்தமாக சுவர் எழுப்ப வேண்டும் என்று இவர் சொல்லும் ஐடியாக்கள் எல்லாம் வேற லெவல். இந்த நிலையில்தான் அவர் புதிய அணு ஆயுத ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

தாக்குதல்
பொதுவாக ஆப்ரிக்காவின் கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்தான், அமெரிக்காவை நோக்கி நகர்ந்து, பின் அமெரிக்காவின் ஏதாவது ஒரு கடல் அருகே கரையை கடக்கும். ஒரு வருடத்தில் அமெரிக்காவில் அதிகமாக இது போல புயல்கள் தாக்குவது உண்டு. அதிலும் மிக அதிக வேகத்தில் அங்கு புயல்கள் தாக்குவது வழக்கம்.

தீர்வு என்ன
இந்த நிலையில்தான் புயல் தாக்குதலில் இருந்து அமெரிக்காவை காப்பாற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன ஐடியா ஒன்று சர்ச்சையாகி உள்ளது. அதன்படி புயல் மையம் கொண்டு இருக்கும் இடத்தில் அணு ஆயுத குண்டை போட்டால் புயல் உடனே செயல் இழந்து விடும். இதன் மூலம் அமெரிக்காவில் புயலே தாக்காது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

மோசம்
புயல் இருக்கும் கடல் பகுதியில் அணு குண்டையோ , ஹைட்ரஜன் குண்டையோ போடும் பட்சத்தில் அது மொத்தமாக செயல் இழக்கும். இதனால் அமெரிக்கா புயல் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார். அதிகாரிகள் உடன் நடந்த சந்திப்பில் டிரம்ப் இந்த வேற லெவல் ஐடியாவை கொடுத்துள்ளார்.

வைரல்
டிரம்ப்பின் இந்த திட்டத்தை பலரும் கிண்டல் செய்துள்ளனர். இப்படி எல்லாம் கூட யாராவது யோசிப்பாங்களா என்று பலரும் கேட்டு டிரம்ப்பை கிண்டல் செய்துள்ளனர். அதே சமயம் டிரம்ப் இதே ஐடியாவை கடந்த வருடமும் ஆலோசனையின் போது கொடுத்தார் என்று கூறுகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications