சீனுக்குள் வந்த ஜெய்சங்கர்.. அமெரிக்க மண்ணில் வைத்தே "மேற்கு உலகிற்கு" வார்னிங்.. அரண்டு போன கனடா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியா கனடா இடையே காலிஸ்தானி விவகாரத்தில் கடுமையான மோதல் நிலவி வருகையில்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார்.

இந்தியா கனடா இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை அடைந்து உள்ளது. இதில் கனடாவின் விசாரணைக்கு பிரான்ஸ், அமெரிக்கா, யுகே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நேரடியாக உதவி செய்ய தொடங்கி உள்ளன. இது இந்தியாவிற்கு பிரஷரை ஏற்படுத்தி உள்ளது.

Minister Jaishankar explosive speech against West and Five Eyes Intelligence double stand in Canada issue

ஆனாலும் இந்தியா இதில் இறங்கி போகாமல்.. நீங்கள் ஆதாரத்தை கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். ஆதாரம் இல்லாமல் பொய்யாக எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டாம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது.

அமெரிக்க மண்ணிலேயே அதிரடி: இந்தியா கனடா இடையே காலிஸ்தானி விவகாரத்தில் கடுமையான மோதல் நிலவி வருகையில்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார். நியூயார்க்கில் நடந்த 'South Rising: Partnerships, Institutions and Ideas' என்ற நிகழ்ச்சியில் இதை அவர் பேசி உள்ளார்.

அதில், சில நாடுகள் பேச்சு உரிமையை, பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு நிறைய விஷயங்களை (காலிஸ்தானி போராட்டம் என்பது அவர்கள் சுதந்திரம், அவர்கள் செயல்பட சுதந்திரம் தர வேண்டும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ சொன்னதை சுட்டிக்காட்டி பேசி உள்ளார்) செய்கிறார்கள். அதை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

அதோடு ஏற்கனவே வளர்ந்த நாடுகள், தங்களிடம் பவர் உள்ள நாடுகள், ஆசிய நாடுகள் வளர்வதை விரும்பவில்லை. உலக ஆர்டர் மாறுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் உலக நலனுக்கு என்று நிறைய விஷயங்களை பேசுவார்கள். ஆனாலும் தொடர்ந்து பல்வேறு உலக விஷயங்களில் அவர்களின் நிலைப்பாடு இரட்டை நிலைபாடாகவே இருக்கும்.

மேற்கு உலக நாடுகள் பல விஷயங்களில் இரட்டை நிலைப்பாட்டையே எடுக்கிறது என்று அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விமர்சனம் செய்து பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சை கனடா, அமெரிக்கா கண்டிப்பக்க எதிர்பார்த்து இருக்காது.

சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.

அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.

இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

உளவு தகவல்: இந்த குற்றச்சாட்டிற்கு பின் அந்த நாடு மேற்கொண்ட உளவு தகவல்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக கனடாவிற்கு உளவு ரீதியாக "ஒரு நாடு" உதவி செய்ததாக கூறப்படுகிறது. மனித உளவு மற்றும் சிக்னல் மூலம் மேற்கொள்ளப்பட்ட உளவு வழியாகவே இந்த குற்றச்சாட்டை கனடா வைப்பதாக கூறப்படுகிறது.

அதாவது மனிதர்கள் வழியாக வழங்கப்பட்ட உளவு தகவல், சில சிகனல்கள் மூலம் கண்டறியப்பட்ட உளவு தகவல்கள் வழியாக இந்த தகவல்களை கண்டறிந்ததாக கனடா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிக்னல் என்றால் போன் பரிமாற்றம், மெயில் பரிமாற்றம், போனை ஒட்டுகேப்பது போன்ற உளவு பணிகள்.ஆகும் அதேபோல் கனடாவிற்கு நெருக்கமாக இருக்கும் Five Eyes intelligence குழுவை சேர்ந்த வேறு ஒரு நாடும் தனது உளவு தகவலை கனடாவிற்கு வழங்கி உள்ளதாம்.

இதிலும் இந்தியாவிற்கு எதிரான தகவல் அடங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த உளவு தகவல்கள் காரணமாகவே சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார்.

யார் இந்த குழு?: இந்தியா கனடா மோதலில் ஃபை ஐஸ் உளவுக்குழு அதாவது Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாக இதில் கூட்டு அறிக்கை வெளியிடவில்லை என்றாலும் இதில் விசாரணை வேண்டும் என்பதில் இந்த குழு தீர்க்கமாக உள்ளது.

ஐந்து கண்கள் என்பது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு உளவுத்துறை கூட்டணியாகும். இது 1946 இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணியானது கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு தொடர்பான அமைப்பு ஆகும். முதலில் அமேரிக்கா - ஐரோப்பா இடையிலான இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் யுனைடெட் கிங்டம்-யுனைடெட் ஸ்டேட்ஸ் கம்யூனிகேஷன் இன்டலிஜென்ஸ் ஆக்ட் (UKUSA) ஒப்பந்தம் என்று இது அழைக்கப்பட்டு அதன்பின் மற்ற 3 நாடுகள் இதில் சேர்க்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+