"மாடர்னா" தடுப்பூசிக்கு எகிறும் மவுசு.. தொற்றை தடுப்பதில் தீவிர செயல்திறன்.. புது ஆய்வில் தகவல்

மாடர்னா தடுப்பூசி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மாடர்னா தடுப்பூசியின் 2-வது டோஸை செலுத்தி 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தொற்றை தடுப்பதில் 87 சதவீத செயல்திறனை கொண்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை.. கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாலும், பீதி இன்னமும் இருக்கவே செய்கிறது.

அதற்குள் ஒமைக்ரான் என்ற மற்றொரு வைரஸ் பல நாடுகளுக்குள் புகுந்து கலக்கத்தை உண்டுபண்ணி வருகிறது..

நம்பிக்கை

நம்பிக்கை

கொரோனாவைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், தடுப்பூசி மட்டுமே நம்பிக்கை தந்து வருகிறது. அந்த வகையில் 2 வகையான தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர்.. மேலும் பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன.. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் பெறும் முயற்சியும் நடந்து வருகிறது.

செயல்திறன்

செயல்திறன்

அந்த வகையில் மாடர்னா நிறுவனமும் ஒன்று.. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், மாடர்னா என்ற பெயரிலேயே தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து உலகெங்கிலும் விற்பனை செய்து வருகிறது... இதுவும் கொரோனாவுக்கு எதிராக 94.1 சதவீதம் என்ற அளவில் எதிர்ப்பு திறனை மனித உடலில் ஏற்படுத்துகிறது... மற்ற தடுப்பூசிகளைப் போல இல்லாமல், பாரம்பரியத்தை விடுத்து mRNA என்ற புதிய முறைப்படி கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி இது என்றும் கூறப்படுகிறது.

தகவல்கள்

தகவல்கள்

இந்நிலையில், மாடர்னா குறித்து 2 வித தகவல்கள் வெளியாகி உள்ளன.. கொரோனா தடுப்பூசிகள், டெல்டா வகை வைரசுக்கு எதிராக செயல்பட்ட திறனுடன் புதிய வகை ஒமிக்ரான் வைரஸுடன் திறம்பட எதிர்த்து போராட முடியாது என்று மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார்... கொரோனாவைரஸ் நீண்ட காலம் தொடரும் என்பதால், ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகளை கண்டறிந்து தயாரிப்பதற்கு அதிக மாதங்கள் ஆகலாம் என்றும், இப்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளில் வரும் வருடத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

அதேபோல, அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான மாடர்னா தடுப்பூசியின் 2-வது டோஸை செலுத்தி 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அது தொற்று பாதிப்பை தடுப்பதில் 87 சதவீத செயல்திறனை கொண்டுள்ளதாம். நோயின் தீவிரத்துக்கு எதிராக 95 சதவீத பாதுகாப்பை கொண்டுள்ளது என்றும், மரணத்துக்கு எதிராக 98 சதவீத செயல்திறனை பெற்றிருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    லேன்செட்

    லேன்செட்

    இந்த மாடர்னா தடுப்பூசியை 3,52,878 பேருடன், தடுப்பூசி போடாத அதே எண்ணிக்கையிலான நபர்களுடன் ஒப்பிட்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.. இந்த ஆய்வின் முடிவை "லேன்செட்" என்ற ஒரு பத்திரிகையிலும் வெளியாகி உள்ளது.. அதில்தான், மாடர்னா தடுப்பூசியின் 2-வது டோஸை செலுத்தி 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தொற்றை தடுப்பதில் 87 சதவீத செயல்திறனை கொண்டுள்ளதாக வெளியாகி உள்ளது.. இது தொற்றை மேலும் கட்டுப்படுத்த பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+