ஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா!
குழந்தையை அசால்டாக தூக்கிய தாயை அமெரிக்கப் போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
நியூயார்க்: பிறந்த குழந்தையை ஒற்றைக் கையில் அசால்ட்டாக தூக்கி வைத்துக்கொண்டு மற்றொரு கையில் சிகரெட் பிடித்த அமெரிக்க தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனக்கென வாழாமல் குழந்தைகளுக்காகவே வாழும் ஒரே ஜீவன் அம்மா தான். அதனால் அம்மாவை இந்த உலகவே போற்றுகிறது. பெரும்பாலான தாய்மார்கள் போற்றக்கூடியவர்கள் தான்.

ஆனால் சில பெண்கள் பெற்றக் குழந்தைகளை கொடுமைப்படுத்தி, சித்ரவதை செய்வதில் அரக்கிகளையே மிஞ்சிவிடுவர். அப்படி ஒரு தாயை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள டென்னிஸி எனும் பகுதிசை சேர்ந்த டைப்ரஷா செஸ்டோன் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அவர் ஒரு கையில் தூக்கி பிடித்தபடி மற்றறொரு கையில் சிகரெட் பிடித்திருக்கிறார். அதுவும் மருத்துவமனை கட்டிலில் படுத்தப்படியே.
இந்த புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் கசிந்து வைரலானது. இதனை பார்த்த போலீசார் டைப்ரஷாவை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அவருடைய குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டைம்ரஷா கைதின் போது மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
குழந்தையை அசால்டாக கையாண்ட பெண்மணி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications