தாயில்லாத கோழிகள்! சகோதரனாக மாறிய 'பாசக்கார' குட்டிக்குரங்கு.. இந்த வீடியோவை பாருங்க! நெகிழ்ச்சி
நியூயார்க்: தாயில்லாத கோழிக் குஞ்சுகளுக்கு ஒரு குட்டிக்குரங்கு சகோதரனாக மாறி அவற்றுடன் சேர்ந்து விளையாடி அவற்றுடன் சேர்ந்து தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆறறிவு இருக்கும் ஒரே காரணத்துக்காக உலகில் உள்ள மற்ற உயிரினங்களை விட சிறந்தவர்கள் என தன்னை தானே நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் மனிதர்களை விட பாசத்திலும், நேசத்திலும் நாங்கள் சிறந்தவர்கள் என நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல சில மிருகங்கள் தங்கள் நடவடிக்கைகளின் மூலமே நமக்கு உணர்த்தி விடுகின்றன.
சொத்துக்காக தாய் - தந்தையை கொலை செய்யும் மகன்; கள்ளக்காதலனுக்காக தனது குழந்தைகளையே கொலை செய்யும் தாய் என மனிதர்களின் கீழ்த்தரமான செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

வியப்பில் ஆழ்த்தும் மிருகங்களின் பாசம்..
ஒருபுறம், மனிதர்களின் நிலைமை இப்படி மோசமாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் மிருகங்களிடம் அன்பும், நேசமும் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. குட்டி மானை வேட்டையாட வந்து பின்னர் மனம் மாறி அதை தனது சொந்த பிள்ளை போல வளர்க்கும் சிங்கம்; தாய் இல்லாத பூனைக்குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் நாய் என இதற்கான உதாரணத்தை சொல்லிக் கொண்டே போகலாம். இதுபோன்ற வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன. அப்படியொரு வீடியோதான் தற்போது வைரலாகியுள்ளது.

அநாதையான கோழிக்குஞ்சுகள்..
அமெரிக்காவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவர், கால்நடை பண்ணை ஒன்றை வைத்துள்ளார். இங்கு ஆடுகள், கோழிகள், வாத்துகள் முதலியவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, அங்குள்ள ஒரு கோழி சில வாரங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்துவிட்டது. இதனால் அந்த கோழியின் 5 குஞ்சுகள் அநாதையாகின. இதனால் அந்தக் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டிக் கொடுத்து அந்த முதியவர்தான் பரமாரித்து வருகிறார்.

குஷிப்படுத்தும் குரங்குக்குட்டி..
தாயுடன் விளையாடுவதை போல தங்களுடன் விளையாட மற்ற கோழிகள் அந்த குஞ்சுகளை அனுமதிக்கவில்லை. இதனால் அந்த குஞ்சுகள் சில நாட்களாக சோகமாகவே காணப்பட்டன. இந்நிலையில், அந்த முதியவர் வீட்டில் வளர்க்கப்படும் குரங்க்குட்டி ஒன்று, கோழிக் குஞ்சுகளின் தாயில்லா சோகத்தை புரிந்துகொண்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், அவற்றுடன் சேர்ந்து விளையாடுவதை குரங்குக்குட்டி வழக்கமாக்கிக் கொண்டது. இதனால் தாயுடன் விளையாடுவது போலவே அந்த குரங்குக்குட்டியுடன் கோழிக்குஞ்சுகள் விளையாடி வருகின்றன. குரங்குக்குட்டி எங்கு சென்றாலும் கோழிக் குஞ்சுகளும் பின்னால் சென்று விடுகின்றன.

குரங்குடன் செம ரகளை..
அந்த வகையில், குரங்குக்குட்டியுன் இந்த கோழிக் குஞ்சுகள் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 23 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், அந்த குரங்குக்குட்டி புல் தரையில் படுத்துக்கொண்டு கோழிக்குஞ்சுகளுடன் உருண்டு விளையாடுகிறது. பின்னர் குரங்குக்குட்டி வேகமாக ஓடுவதும், அதனை கோழிக்குஞ்சுகள் துரத்துவதுமாக குதூகலமாக இருக்கின்றன. பின்னர் குரங்குக்குட்டி தரையில் படுத்து தூங்க அந்த கோழிக்குஞ்சுகள் அதன் மீது விளையாடுகின்றன. ஆனால், அந்த குரங்குக்குட்டி அதனை கொஞ்சமும் தொந்தரவாக எண்ணாமல், அந்தக் குஞ்சுகளை விளையாட அனுமதிக்கிறது. இந்த வீடியோவை சுசானந்த நந்தா என்ற வனத்துறை அதிகாரி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு கீழே, "உலகிலேயே விலைமதிக்க முடியாத விஷயம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான். குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications