"பேராபத்து".. உருகுதே, உயருதே.. அண்டார்டிகாவில் பனிபரப்பு குறையுது.. ரெடியா இருங்க.. என்னாது சுனாமியா
இந்த ஆண்டிற்கான பனி அளவில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
நியூயார்க்: அண்டார்டிகா பனிக்கடல் மறுபடியும் உருகி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது... இதுகுறித்து விஞ்ஞானிகள் அறிக்கை ஒன்றையும் விடுத்து கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதாவது, இந்த ஆண்டிற்கான பனி அளவில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்... பொதுவாகவே, வெப்பமயமாதல் உலகம் முழுவதும் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது..
பருவநிலை மாற்றங்கள், பனிக்கட்டிகள் உருகுதல், காட்டுத்தீ, கடல் மட்டம் அதிகரிப்பு இப்படி பல்வேறு சவால்களுக்குள் நாம் சூழ்ந்துள்ளோம்.

வார்னிங்
அதுமட்டுமல்ல, நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கு இதே சவால்கள் முன்நிற்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும், தினம் தினம் எகிறி சிக்கலானதாகி மாறிவிடும் என்றும், அதை கையாள்வதற்கு கடினமானதாகவும் மாறக்கூடும் என்றும் ஏற்கனவே ஐபிசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, உலகம் முழுவதும் 330 முதல் 360 கோடி மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிப்படையும் நிலையில் வாழ்ந்து வருகிறார்களாம்..

சமாளிப்பு
இன்னும் சில வருடங்களில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரும்பட்சத்தில், தவிர்க்க முடியாத வேகத்தில் தீவிர காலநிலை பேரிடர்களும், மனிதர்கள் மற்றும் சூழல் அமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.. குறிப்பாக, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிர காலநிலை பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், காலநிலை மாற்றம் அல்லாத பிரச்சனைகளும் சேர்ந்தே நிகழும்போது, அவைகள் சமாளிக்க முடியாத பிரச்சனையாக மாறக்கூடும் என்றும், அதுபோன்ற சமயங்களில் காலநிலை மாற்றத்தை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வேறு சில புதிய பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள்.

பனிக்கட்டி
அந்தவகையில், இப்போது இன்னொரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் மையமானது, அண்டார்டிகாவின் கடல் பனி அளவு குறித்து, வருடந்தோறும் அறிக்கையை வெளியிட்டு வருகிறது... பொதுவாக, இந்த அண்டார்ட்டிக் பெருங்கடலானது மிகப்பெரிய பனிப்பாறைகளையும், பனிக்கட்டிகளையும் கொண்டதாகும்.. இந்த கடல் பனி அளவானது உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வேகமாக உருகி வருவதாகவும், இதனால் கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்..

கடல்பனி அளவு
இதன்காரணமாகவே, அண்டார்டிகாவின் கடல் பனி அளவு குறித்த அறிக்கையை வருடந்தோறும், தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் மையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்துக்கான அறிக்கையும் கடந்த 13ம் தேதி வரை கணக்கிடப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சென்ற வருடம் பிப்ரவரி 25 வரையிலான கணக்கெடுப்பில் 1.92 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்தது... ஆனால், இந்த வருடம், அண்டார்டிகா கடல் பனி அளவு 1.91 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது...

பேராபத்து
கடந்த ஆண்டுகளில் பிப்ரவரி 18 முதல் மார்ச் 3 வரை பனி அளவு கடுமையாக சரிந்துள்ளது... கடந்த 2 வருடங்களாகவே தொடர்ந்து பனி பரப்பு குறைந்து வருவது, பல்வேறு சூழலியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.. கடல் மட்டம் உயர்வால் சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் அந்த அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளனர்.. இந்த அண்டார்டிகாவில் கடல் பனியின் அளவு, தொடர்ந்து 2-வது ஆண்டாக குறைந்துள்ளதுடன், பனி அளவில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால், சுனாமி உள்ளிட்ட பிரச்சனைகள் வரக்கூடும் என்று கவலை நிறைந்த எச்சரிக்கையை ஆய்வாளர்கள் விடுத்துள்ளது கலக்கத்தை தந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications