கழுத்தில் இரும்பு செயினுடன்.. எம்ஆர்ஐ ஸ்கேன் ரூமில் நுழைந்த நபர்.. மறுநொடியே அமெரிக்காவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பொதுவாக, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதாக இருந்தால், ஸ்கேன் ரூமுக்குள் நுழைவதற்கு முன்பு, உடலில் எந்தவிதமான உலோகப் பொருட்களும், தங்க நகைகளும், மின்னணு பொருட்களும் இருக்கக்கூடாது.. அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டுதான், ஸ்கேன் சென்டர் ரூமுக்குள்ளேயே அனுமதிக்கப்படுவார்கள். அதனால்தான், அனைத்து ஸ்கேன் சென்டர்களிலும், இதற்கென பிரத்யேக ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.. இந்நிலையில், அமெரிக்காவில் நடந்துள்ள ஒரு சம்பவம், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

நோயை கணிக்க பெரிதும் துணைபுரிவது எக்ஸ்ரே, சி.டி., எம்.ஆர்.ஐ. ஸ்கேன்தான்,.. ஸ்கேன் பரிசோதனைகளில் மிகச் சிறந்ததும் இதுதான். பல நோய்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் கணிப்பதில் MRI Scan முதலிடத்தில் உள்ளது.. Magnetic Resonance Imaging என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம்தான் எம்ஆர்ஐ.

MRI Scan us old man iron chain

உடல் உறுப்பு பாதிப்புகள்

எக்ஸ்ரே, CT ஸ்கேன் கருவிகள்போல் இது எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளைப் படம் பிடிப்பதில்லை... அதற்கு பதிலாக, உடலில் ஒரு காந்தப் புலத்தை உருவாக்கி, ரேடியோ அதிர்வலைகளை பயன்படுத்தி, கம்ப்யூட்டர் உதவியுடன் உறுப்புகளை படம்பிடித்துக் காண்பிக்கும் பரிசோதனையாகும்.

இந்த ரேடியோ அலைகள், உறுப்பின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகிற காரணத்தால்தான், அந்த உறுப்பின் உள்பகுதி, வெளிப்பகுதி, குறுக்குப்பகுதி, நெட்டுப்பகுதி என எல்லா பகுதிகளையும் தெளிவாக காண முடிகிறது.. அத்துடன், உடம்பிலுள்ள உறுப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாதிப்புகள், குறைபாடுகளையும் மிக நுணுக்கமாக தெரிந்து கொள்ள முடியும்.

தங்க நகைகள், உலோக பொருட்கள்

எனினும் எம்ஆர்ஐ ஸ்கேன் டெஸ்ட் எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.. ஆனால், அப்படி எடுக்கும்போது, சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.. குறிப்பாக, உடம்பில் அலர்ஜி இருந்தால், ஸ்கேன் எடுப்ப தற்கு முன்பேயே சொல்லிவிட வேண்டும் என்பார்கள்.

அதேபோல, ஸ்கேன் எடுக்கப்படும் மருத்துவமனை அல்லது ஸ்கேன் சென்டரில் தரப்படும் டிரஸ்ஸை மட்டுமே அணிந்துகொள்ள வேண்டும். தங்க நகைகள், மோதிரம், வளையல், செயின் மற்றும் வாட்ச், ஊக்கு, பட்டன், கண்ணாடி, பல்செட், இடுப்பு பெல்ட் போன்ற உலோக பொருட்களைக் கழற்றிவிட வேண்டும். அதேபோல, சில்லறை காசு, சாவி, ATM கார்டு போன்றவற்றையும் வெளியில் எடுத்துவிட வேண்டும்.

உடம்பில் நகைகள், ஸ்கேன்

காரணம், உடம்பில் நகைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்றவை எம்ஆர்ஐ இயந்திரத்தின் காந்தப்புலத்தில் தலையிட்டு, தீங்கு விளைவிக்கும் பொருள்களாக மாறலாம்.. இதனால், தீக்காயங்களும் ஏற்படலாம்.. அல்லது ஸ்கேன் தரத்தையும் இவைகள் பாதித்துவிடலாம். எனவேதான், ஸ்கேன் எடுக்கும்போது மேற்கண்டவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.. நியூயார்க் நகரத்தில், லாங் தீவின் வெஸ்ட்பரி என்ற பகுதியில் நாஸாவ் ஓபன் MRI Scan Center ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த சென்டருக்கு, அங்கு வசித்து வரும் அட்ரியன் ஜோன்ஸ் என்ற வயதான நபர் சென்றிருக்கிறார்..

முழங்கால் வலி அவதி

நீண்ட நாட்களாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு, அதற்கு சிகிச்சையும் பெற்று வந்த நிலையில், தன்னுடைய முழங்காலை ஸ்கேன் எடுப்பதற்காக இங்கு சென்றிருக்கிறார்.. முழங்கால் வலி என்பதால், ஸ்கேன் எடுக்க உதவியாக, தன்னுடைய 61 வயது மனைவியையும் உதவிக்காக அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், மருத்துவர்களின் அனுமதியின்றி திடீரென ஸ்கேன் ரூமுக்குள் நுழைந்துவிட்டார் ஜோன்ஸ்.. மிகுந்த முழங்கால் வலியுடன் இருந்ததால், ஸ்கேன் எடுப்பதற்காக கழுத்தில் இருந்த இரும்பு செயினைகூட கழட்டிவைக்க மறந்துவிட்டார்..

எம்ஆர்ஐ ஸ்கேன்

செயினுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் ரூமுக்குள் வந்துவிடவும், ஸ்கேன் இயந்திரத்துக்குள் அசுரவேகத்தில் இழுக்கப்பட்டார்... இதில் ஒரே செகண்டில் நிலைகுலைந்துப்போனார்.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர்கள், அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.. ஜோன்ஸ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இது தொடர்பாக நியூயார்க் போலீசார் சொல்லும்போது, "MRI என்பது காந்த சக்தி அதிகம் கொண்ட மிஷினாகும்.. சிறிதாக உலோக பொருட்கள் இருந்தாலும்கூட, அது விபரீதத்தை தந்துவிடும்.. அப்படியிருக்கும்போது, முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட ஜோன்ஸ், அனுமதியின்றி எம்ஆர்ஐ ரூமுக்குள் நுழைந்துவிட்டார். அவரது கழுத்திலிருந்த பெரிய இரும்பு சங்கிலி இயந்திரத்தில் இழுத்துவிட்டதால், அதில் சிக்கி உயிரிழந்துவிட்டார்" என்றனர்.

கண்ணீர் வடிக்கும் மனைவி

தன்னுடைய கணவர் ஜோன்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிர்ச்சியிலிருந்து, அவரது மனைவி, இன்னமும் மீளவில்லை.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "இந்த மருத்துவமனைக்கு ஏற்கனவே கணவரும், நானும் வந்திருக்கிறோம்.. எப்போதுமே என் கணவர் கழுத்தில் இரும்பு செயின் அணிந்திருப்பார்.. அது இங்குள்ள ஊழியர்கள் அனைவருக்குமே தெரியும்..

நாங்கள் ஸ்கேன் எடுக்க வருகிறோம் என்று தெரிந்தும், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது" கண்ணீருடன் கூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+