சந்திரயான் 3ஐ தொடர்ந்து மனித குலம் படைத்த வரலாற்று சாதனை! சூரிய குடும்பம் எப்படி உருவானது? விடை இதோ
நியூயார்க்: மனித குல வரலாற்றில் முதன் முறையாக ஒரு சிறுகோளிலிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டுவரும் திட்டத்தை நாசா வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பூமிக்கு திரும்புகிறது. இதன் மூலம் சூரிய குமும்பபம் உருவான வரலாற்றை அறிந்துக்கொள்ள முடியும்.
நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் பத்திரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இந்த சம்பவம் விண்வெளி ஆய்வுகள் மீது சாமானிய மக்களுக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இப்படி இருக்கையில், தற்போது மற்றொரு வரலாற்று சாதனையை அமெரிக்காவின் நாசா படைத்திருக்கிறது.

இந்த உலகம் எப்படி உருவானது? இந்த உலகம் இருக்கும் சூரிய குடும்பமும், அதில் உள்ள மற்ற கோள்களும் எப்படி உருவானது என்பது குறித்து மனிதர்களாகிய நாம் நீண்ட தேடலை மேற்கொண்டு வருகிறோம். தற்போது வரை நாம் விண்வெளி துறையில் மேற்கொண்ட அனைத்து ஆய்வுகளுக்கும் அடிப்படை இதுதான். பூமியை சுற்றி உள்ள நிலவு, செவ்வாய் உள்ளிட்ட கோள்களில் நாம் விண்கலன்களை இறக்கி ஏராளமான ஆய்வுகளை செய்திருக்கிறோம்.
நிலவிலிருந்து மண் துகள்களை கூட பூமிக்கு கொண்டு வந்து ஆய்வுகளை செய்திருக்கிறோம். ஆனால் சிறு கோள்களில் நாம் இதுவரை பெரியதாக ஆய்வுகளை மேற்கொண்டதில்லை. தற்போது நிலவு, செவ்வாய் உள்ளிட்ட கோள்களில் ஆய்வு செய்தால், சில விஷயங்களைதான் நாம் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இதே சிறு கோள்களில் ஆய்வு செய்யும் போது, பூமி உருவாகும்போது அது எப்படி இருந்தது என்பதை தெரிந்துகொள்ளலாம். ஏனெனில் முழுமையாக கோள்களாக மாற முடியாமல் உள்ள விண்கற்கள்தான் சிறு கோள்கள் என்று அழைக்கப்படுகிறது.
எனவே இந்த ஆய்வின் மூலம் சூரிய குடும்பத்தின் தோற்றமும் அதன் பரிணாம வளர்ச்சியையும் நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். கோள்கள் உருவாதற்கு சில கரிம சேர்மங்கள் அவசியமானதாகும். இது பூமியிலும், நிலவு மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களில், துணைகோள்களிலும் மிகவும் ஆழத்தில் இருக்கிறது. ஆனால் இதே சிறு கோள்களில் இது மேலடுக்கிலேயே இருக்கும். எனவேதான் இதனை ஆய்வு செய்ய நாசா பெரிய அளவுக்கு முயன்று வந்தது.
இந்த முயற்சியின் விளைவாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதியன்று 'ஓசைரிஸ்-ரெக்ஸ்' எனும் விண்கலத்தை விண்ணில் அனுப்பியது. இது பூமியிலிருந்து சுமார் 4,82,120 கி.மீ தொலைவில் உள்ள '101955 பென்னு' எனும் குறுங்கோளை ஆய்வு செய்தது. கடந்த 2020ம் ஆண்டு நாசா அனுப்பிய ஓசைரிஸ்-ரெக்ஸ் எனும் விண்கலம் 101955 பென்னு எனும் சிறு கோளிலிருந்து 12 மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமியை திரும்பியுள்ளது.
இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாதிகளை எடுத்து வந்த நாசா கருவி பூமியில் விழும். இதை தங்களது விஞ்ஞானிகள் மீட்டு ஆய்வு செய்வார்கள்" என்று நாசா கூறியுள்ளது. மனித குல வரலாற்றில் ஒரு சிறுகோளிலிருந்து மாதிரிகளை எடுத்து வருவது இதுதான் முதல் முறை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த கோள் 22ம் நூற்றாண்டில் பூமியை தாக்க வாய்ப்பிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications