பிரான்சுக்கு அருகே..திடீரென வெளியே வந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்! மிரண்டு போன நேட்டோ! அடுத்து ட்விஸ்ட்
நியூயார்க்: நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே, ரஷ்ய கடற்படையின் நிலை குறித்து கிண்டல் செய்துள்ளார். ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேற்பரப்புக்கு வந்ததாக வெளியான செய்திகள் குறித்து அவர் கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார். ரஷ்யாவின் நீர் மூழ்கி கப்பலை அடித்து நொறுக்கிவிடுவோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ரஷ்யாவின் Novorossiysk நீர்மூழ்கிக்கப்பல் கடந்த 2 நாட்களுக்கு முன் பிரான்ஸ் அருகே வடக்கு கடல் பகுதியில் ரோந்து பணிகளை செய்து கொண்டு இருந்த போது திடீரென கடலுக்கு மேலே வந்தது. பொதுவாக நீர்மூழ்கிக்கப்பல்கள் கடலுக்கு மேலே வராது. அதுவும் வேறு நாட்டு எல்லையில் வராது.

இதையடுத்து ரஷ்யாவின் அந்த நீர்மூழ்கி கப்பல் பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு கடற்படையின் மூலம் வழியனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தான் நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே கிண்டல் செய்துள்ளார்.
நேட்டோ படைகள் இதை தீவிரமாக கண்காணித்தது. ரஷ்யாவின் கப்பல் ஒரு ஊனமுற்ற கப்பல் போல.. திணறி திணறி சென்றுள்ளது. நாங்கள் நினைத்து இருந்தால் அதை அடித்து நொறுக்கி இருப்போம் என்று நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே கிண்டல் செய்துள்ளார்.
என்ன நடந்தது?
ரஷ்யாவின் டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பலான நோவோரோஸ்ஸிய்ஸ்க் (Novorossiysk) பிரான்சின் பிரிட்டானி கடற்கரைக்கு அருகிலும், பின்னர் ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாகவும் பயணம் செய்தபோது திடீரென கடலுக்கு மேலே வந்தது. ரோந்து பணிகளை செய்யும் போதே திடீரென அவசரமாக மேலே வந்தது. நேட்டோ படையின் கடற்படைகள் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல் மேற்பரப்பிற்கு வந்ததை கவனித்தன.
அங்கே இது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே நேட்டோ படைகள் அதை சுற்றி வளைத்தன. அதன்பின் அந்த நீர்மூழ்கி கப்பல் ஆபத்து இல்லை. வேறு சில பிரச்சனைகள் காரணமாக மேலே வந்ததை அறிந்து கொண்ட பின்.. நேட்டோ மற்றும் ஐரோப்ப நாடுகளின் கடற்படைகள் இந்தக் கப்பலைத் தொடர்ந்து கண்காணித்தன.
ஏன் இது வழக்கத்திற்கு மாறானது?
இதையடுத்து பிரான்ஸ் கடற்படை அந்த நீர்மூழ்கி கப்பலுக்கு பாதுகாப்பாக சென்றது. துணைக்கு அழைத்து செல்வது போல அந்த நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் கப்பல் அழைத்து சென்றது. சர்வதேச கடல் எல்லைக்கு செல்லும் வரை அந்த நீர்மூழ்கி கப்பலுக்கு பிரான்ஸ் படை ரோந்து பணிகளை செய்தது.
நீர்மூழ்கிக் கப்பல்கள் பொதுவாக நீரின் அடியில் பயணிக்கும். பரபரப்பான ஐரோப்பிய கடற்பகுதிகளில் இது மேற்பரப்பில் செல்வதோ, இழுத்துச் செல்லப்படுவதோ அல்லது துணைக்கு வேறு கப்பலுடன் செல்வதோ உலக நாடுகளால் கவனிக்கப்படும். அப்படிதான் ரஷ்யாவின் இந்த நீர்மூழ்கி கப்பலும் கவனம் பெற்றது.
ரஷ்ய வட்டாரங்கள், அந்த நீர்மூழ்கிக் கப்பலின் அடித்தளத்தில் எரிபொருள் கசிந்து கொண்டிருப்பதாகவும், இது வெடிப்பு அபாயத்தை உருவாக்குவதாகவும் செய்தி வெளியிட்டது. அதனால்தான் கப்பல் மேலே வந்தது என்று கூறப்பட்டது.
அதாவது கடலுக்கு அடியில் இருந்த போது அதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கும். இதை தவிர்க்கவே அந்த கப்பல் மேலே வந்ததாக கூறப்பட்டது. ஆனால் ரஷ்ய கடற்படை இதை மறுத்து உள்ளது. எங்கள் கப்பலில் எந்த பிரச்சனையும் இல்லை .. சர்வதேச விதிகளை பின்பற்றவே நாங்கள் கடலுக்கு வெளியே வந்தோம் என்று ரஷ்யா கூறி உள்ளது.
இதைத்தான் நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே, ரஷ்ய கடற்படையின் நிலை குறித்து கிண்டல் செய்துள்ளார். ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல் மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், திணறி, திணறி கடலில் தத்தளித்து சென்றதாகவும் மார்க் ரூட்டே கிண்டல் செய்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications