நெஸ்லே சிஇஓக்கு "காஸ்ட்லி" பெண் அதிகாரி மீது குபீர் ஆசை.. 40 வருடம் வேலை பார்த்தும் இப்படி ஆயிருச்சே
நியூயார்க்: உலகப்புகழ் பெற்ற சுவிஸ் உணவு நிறுவனமான நெஸ்லே, தலைமை நிர்வாக அதிகாரி லாரன்ட் ப்ரீக்ஸ், நடத்தை விதிகளை மீறியதால் அதிரடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றிய பிரெக்ஸுக்கு, பணியிலிருந்து வெளியேறுவதற்கான எந்தவிதமான நிதிப் பலன்களும் வழங்கப்படாது என்றும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த உணவு பெருநிறுவனம் நெஸ்லே.. உலகளவில் முன்னணி உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது.. இந்த நெஸ்லே நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வருபவர் லாரன்ஸ் ப்ரீக்ஸ்.

காதல் பற்றின விவகாரம்
இவர் விதிமுறைகளுக்கு மாறாக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருடன் சிஇஓ . ரகசிய உறவு வைத்திருந்ததாக புகார் எழுந்தது... அதாவது, தனக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருடன், தனக்கு இருந்த காதலை, நிர்வாகத்திடம் ப்ரீக்ஸ் மறைத்துவிட்டாராம்.. காதல் பற்றின விவகாரத்தை தெரிவிக்கத் தவறியதால், தற்போது ப்ரீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அப்பெண்ணுடன் இருந்த ரகசிய உறவு குறித்தும், நிறுவனத்தின் தலைவர் பால் பல்கே தலைமையில் விசாரணை நடைபெற்றது.. இறுதியில், ப்ரீக்ஸ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ப்ரீக்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. நிறுவனத்தின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் தெரிவித்துள்ளது..
அறிக்கை - திடீர் பணி நீக்கம்
இது குறித்து நெஸ்லே நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது: "லாரன்ட் ப்ரீக்ஸ் கடந்த ஒரு வருடமாக நெஸ்லேவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இந்த திடீர் பணிநீக்கத்தைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக நீண்டகாலமாக நெஸ்லேவில் பணியாற்றி வரும் பிலிப் நவ்ரட்டில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
இது ஒரு அவசியமான முடிவு. நெஸ்லேவின் மதிப்புகள் மற்றும் நிர்வாகம் எங்கள் நிறுவனத்தின் வலுவான அடித்தளமாகும். அவற்றை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
ரகசிய உறவு அம்பலம்
ப்ரீக்ஸ் பொறுத்தவரை, நெஸ்லே நிறுவனத்தில் கடந்த 1986லிருந்து பணியாற்றி வருகிறார்.. ஆரம்பத்திலிருந்து படிப்படியாக பல்வேறு பதவிகளை வகித்து வந்த நிலையில், கடந்த 2022ல்தான், லத்தீன் அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரீக்ஸ் பொறுப்பேற்றார்... கடந்த ஆகஸ்ட் 2024ல் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த மார்க் ஷ்னைடருக்கு பதிலாக செப்டம்பர் 1, 2024 அன்று பிரீக்ஸ் தன்னுடைய புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.
ஆனால், முழுமையாய் ஒருவருடம் கூட முடியாத நிலையில், காதல் விவகாரம் வெடித்து விளம்பியது.. ப்ரீக்ஸ்க்கும் ஜூனியர் அதிகாரிக்கும் ரகசிய உறவு இருந்து வந்தது அம்பலமாகிவிடவும், உடனடி விசாரணை நடந்து, அந்த விசாரணையில் முடிவில் நடத்தை விதிகள் மீறப்பட்டது உறுதியாகி, நேற்றிலிருந்து சிஇஓ பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ப்ரீக்ஸ்.
புதிய சிஇஓ நியமனம்
சிஇஓ பொறுப்பை ஏற்றபிறகு நெஸ்லே நிறுவனம் ஒருமுறை தான் முதலிடம் பிடித்தது.. அதற்குள் கடந்த வருடம் நெஸ்லேவின் பங்கு விலை கிட்டத்தட்ட கால் பகுதி சரிந்துவிட்டது.
கடந்த 40 வருடங்களாக நெஸ்லே நிறுவனத்தில் வேலைபார்த்தும்கூட, பிரெக்ஸுக்கு, பணியிலிருந்து வெளியேறுவதற்கான எந்தவிதமான நிதிப் பலன்களும் வழங்கப்படாது என்று நிறுவனம் அறிவித்துவிட்டது. இப்போது ப்ரீக்ஸுக்கு பதிலாக, பிலிப் நவ்ராடில் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications