ஹாப்பி நியூ இயர்.. என்னது உண்மையாகவே புத்தாண்டு என்று ஒன்று கிடையாதா? அறிவியல் சொல்லும் விளக்கம்
நியூயார்க்: நாளை இரவுடன் 2024 முடிவடைகிறது. அதற்கு பிறகு புத்தாண்டு பிறக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புத்தாண்டு உண்மை இல்லையா?: அட ஆமாம் மக்களே! பூமி ஓரிடத்திலிருந்து தொடங்கி சூரியனை சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வரும்போது ஓராண்டு முடிவடைகிறது என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அன்னப்பறவை, டிராகன், யூனிகார்ன் போல புத்தாண்டும் ஒரு கற்பனைதான். ஏனெனில் சூரியன் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சூரியன் சுமார் 8.28 லட்சம் கி.மீ வேகத்தில் இந்த பால்வெளி அண்டத்தை சுற்றி வருகிறது.

அப்படியெனில் சூரியனை சுற்றிக்கொண்டிருக்கும் பூமியும் பால்வெளி அண்டத்தை சுற்றி வருகிறது. இப்படி வரும்போது நமது பூமி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்துக்கொண்டே இருக்கிறது. எனவே மீண்டும் அந்த இடத்திற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியெனில் புத்தாண்டு என்று ஒன்று கிடையாது.
புத்தாண்டு எப்படி உருவானது?: தொடக்கத்தில் யாருக்கும் நேரம் என்பது முக்கியமானதாக தெரியவில்லை. ஆனால் காலம் என்பது மிக முக்கியமானதாக இருந்தது. உதாரணத்திற்கு நாம் ஆதி மனிதர்களாக டிரஸ் ஏதும் போடாமல் இருந்த போது, பழங்களையும், சின்ன சின்ன பூச்சிகளையும் தின்று வாழ்ந்து வந்தோம். அப்போது எந்த காலத்தில் எந்த பகுதியில் உள்ள காய்கள் பழங்களாக மாறும் என்பது நமக்கு தெரிந்திருந்தது. இதுவே நாம் கொஞ்சம் வளர்ச்சியடைந்து கோவனம் போன்ற ஆடைகளை உடுத்தி வேட்டையாடியபோது, கோடை காலத்தில் சாப்பிட என்ன கிடைக்கும்? குளிர் காலத்தில் என்ன கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்திருந்தோம்.
மனித வளர்ச்சி: இன்னும் கொஞ்சம் வளர்ந்து விவசாயம் செய்ய தொடங்கியபோது, எந்த காலம் மழைக்காலம்? எது பனிக்காலம் என்பது தெரிந்திருந்தது. எனவே அதற்கேற்ப பயிர்கள் விதைக்கப்பட்டன. இப்படித்தான் மாதங்களும், நாட்களும் உருவாகின. அப்போதுதான் ரோம் காலண்டர் பின்பற்றப்பட்டது. இதில் மொத்தம் 10 மாதங்கள் இருக்கும். முதல் மாதம் மார்ச்தான். மார்ச் 1 வந்தால் இந்த காலண்டரை பின்பற்றுபவர்கள் புத்தாண்டை கொண்டாடுவார்கள்.
ஆனால் இதில் இருந்த மாதங்களும், வருடத்தின் மொத்த நாட்களையும் கூட்டி பார்த்தால் கணக்கு சரியாக வரவில்லை, எங்கோ இடித்தது. எனவேதான் ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். இதில்தான் முதன் முறையாக ஜனவரி எனும் மாதம் வந்தது. மட்டுமல்லாது 12 மாதங்கள் இருந்தன. எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் ஏறத்தாழ ஓராண்டு வந்தது. ஆனாலும் இதில் ஒரு பிரச்சனை இருந்தது. அதாவது இது ஏறத்தாழதான் சரியாக இருந்ததே தவிர துல்லியமாக இருக்கவில்லை.
காலப்போக்கில் துல்லியமான நேரத்திற்கான தேவை எழுந்தது. இதனையடுத்து 1582ம் ஆண்டு, 13ம் போப் கிரிகோரி என்பவர் பழைய காலண்டரை பட்டி டிங்கரிங் பார்த்து, கொஞ்சம் நாட்களை கூட்டியும், சிலவற்றை கழித்தும் புதுசாக ஒரு காலண்டரை கையில் கொடுத்தார். அதுதான் இப்போது வரைக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் நாம் புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் புத்தாண்டு என்று ஒன்று உண்மையில் கிடையாது. இப்போதும் கூட சீனா போன்ற நாடுகள் நிலவை அடிப்படையாக கொண்ட லூனார் காலண்டரை பயன்படுத்திதான் புத்தாண்டை கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications