நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல.. சீமானுக்கு நித்யானந்தா பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல... சீமானுக்கு பதிலடி கொடுத்த நித்தியானந்தா

    நியூயார்க்: ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. என்று நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டராக கருதப்படும் பிஎம்ஒ கைலாஷ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு பேசும் போது "எனக்கு குடியுரிமை இல்லைன்னு சொல்றீங்களா.. பாஸ்போர்ட்டை கொடுங்க.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ராஜா.. கைலாசான்னு ஒரு நாடு உருவாயிடுச்சு.. எங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும், அவரது கைலாசா நாடும் இருக்கு" என்று கிண்டலாக கூறினார்.

    கைலாசா நாடு

    கைலாசா நாடு

    பாலியல் குற்ற புகாரில் சிக்கிய நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தா, அமெரிக்கா அருகே ஒரு தீவை வாங்கி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. அந்த நாட்டை இந்துக்களுக்கான நாடாக தான் உருவாக்குவதாக நித்யானந்தா கூறியிருந்தார்.

    சீமான் கிண்டல்

    சீமான் கிண்டல்

    இது தொடர்பாக நித்யானந்தா பேசும் காணொளிகள் பரவி இருந்தது. இதனால் பலரும் நித்யானந்தாவின் நாட்டுக்கு செல்ல பலரும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடியுரிமை பறிக்கப்பட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன் என்று கிண்டலாக இன்று தெரிவித்து இருந்தார்.

    டுவிட்டர் பக்கம்

    டுவிட்டர் பக்கம்

    இந்நிலையில் சீமானின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நித்யானந்தாவின் பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கம் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளது.

    குடியுரிமை வழங்க

    அதில் " ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்!!!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    nithyananda said Sri Kailash is not an open monastery after seeman over he told if citizenship blocked i will go kailasa
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X