இது அணு ஆயுதம் மாதிரி.. அமெரிக்காவிற்கு முக்கியமான இடத்தில் கனடா வைத்த செக்! கேட்டா ஆடிப்போய்டுவீங்க
நியூயார்க்: அமெரிக்காவிற்கு மிகப்பெரிய செக் வைக்கும் ஆலோசனை ஒன்றில் கனடா ஈடுபட்டு வருகிறதாம். கனடாவின் அடுத்த லிபரல் கட்சித் தலைவராகவும், கனடாவின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி அறிவிக்கப்பட்டார், ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பதிலாக அந்நாட்டின் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்று உள்ளார்.
கனடா மீது 25% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடாவின் எரிபொருட்களுக்கு 10% வரி விதித்துள்ளார். அதேபோல் மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளார். இதற்கு கனடா மற்றும் மெக்சிகோ.. அமெரிக்காவின் பொருட்களுக்கு 25% வரி விதித்து உத்தரவிட்டு உள்ளது.

கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ.. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ.. அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.
மோதல் எச்சரிக்கை
கனடாவின் அடுத்த பிரதமர் மார்க் கார்னி, கனடா ஒருபோதும், எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் திமிருக்கு அடிபணியாது. நாங்கள் ஒரு போதும் அமெரிக்காவின் மாகாணமாக இணைய மாட்டோம். அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை எனது அரசாங்கம் கட்டணங்களை குறைக்காது.
டிரம்ப்பை நாங்கள் வெல்ல விட மாட்டோம். இந்த மோதலில் நாங்கள் உறுதியாக இருப்போம். நாங்கள் உணர்ந்து கொண்ட பாடம் ஒன்றுதான். எங்களுக்கு ஒரு அண்டை நாடு உள்ளது. இத்தனை காலம் நாங்கள் நம்பிய அந்த அண்டை நாட்டை இனியும் நம்ப முடியாது, என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கார்னி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக அறிவிப்பதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் தீவிரமாக இருக்கிறாராம். அவர் இத்தனை நாட்கள் இந்த விவகாரத்தில் அவர் சீரியஸாக பேசவில்லை என்று கருத்துக்கள் வைக்கப்பட்ட நிலையில்.. அவர் உண்மையில் இதில் தீவிரமாக இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கார்னி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணு ஆயுதம் மாதிரி
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய செக் வைக்கும் ஆலோசனை ஒன்றில் கனடா ஈடுபட்டு வருகிறதாம். அதன்படி கனடாவின் சொந்த நிறுவனமான போர்ன் ஹப் எனப்படும் 18 ப்ளஸ் வீடியோ பக்கத்தை அமெரிக்காவில் நீக்க உள்ளார்களாம். அமெரிக்காவில் இது மிகப்பெரிய மார்க்கெட். பல கோடிகள் புரளும் மார்க்கெட். ஒரு மாதத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமெரிக்காவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளம் போர்ன் ஹப் ஆகும்.
இதை மொத்தமாக நிறுத்த கனடா ஆலோசனை செய்து வருகிறதாம். கனடாவின் அணு ஆயுதம் போன்றது இது என்று உலக அரசியலில் வர்ணனை செய்யப்படுகிறது. அமெரிக்காவிற்கு செக் வைக்கும் விதமாக கனடா இந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறதாம்.
கனடா ஏன் அமெரிக்காவிற்கு மிக முக்கியம்
2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60% ஆகும். அந்த அளவிற்கு அமெரிக்கா கனடாவை நம்பி உள்ளது.
2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 7.1 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க இயற்கை எரிவாயு இறக்குமதியில் குறிப்பிடத்தக்க அளவு ஆகும்.
2022 ஆம் ஆண்டில், கனடா சுமார் 53 டெராவாட் (TWh) மின்சாரத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. கணக்குப்படி பார்த்தால் மின்சாரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு என்று அனைத்திற்கும் கனடாவையே அமெரிக்கா நம்பி உள்ளது.
-
Donald Trump: தோற்றுப் போய்ட்டாங்க.. ஈரானுக்கு இனிமேல்தான் இருக்கு! கடுமையாக எச்சரித்த டிரம்ப் -
F1 Visa: இந்திய மாணவர்களுக்கான அமெரிக்க கல்வி விசா சரிவு! டிரம்ப் நெருக்கடி! -
ஈரானை தாக்கட்டுமா? பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் மூக்கை உடைத்து அனுப்பிய சவுதி ‘பிரின்ஸ்' -
இந்தியாவுக்கு பெர்மிஷன் ஏன்? ரஷ்ய ஆயில் பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
எங்களை போட்டு அடிக்காதீங்க.. போரை நிறுத்த ஈரானிடம் பேசும் சவுதி அரேபியா! டிரம்பை நம்பாத ‘பிரின்ஸ்' -
பெட்ரோல் - டீசல் விலை உயரப்போகுது.. 6 ஆண்டுக்கு பின் புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய்! ஷாக் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம்












Click it and Unblock the Notifications