திகார் சிறையில் உள்ள உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய.. நியூயார்க் மேயர் மம்தானி!
நியூயார்க்: ஜேஎன்யூ மாணவர் தலைவர் உமர் காலித், டெல்லி கலவர வழக்கில் சுமார் 1,500 நாட்களுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு நியூயார்க் மேயராக பொறுப்பேற்றிருக்கும் ஜோஹ்ரான் மம்தானி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம், டெல்லி கலவர வழக்கில் உபா சட்டத்தின் கீழ் உமர் காலித் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகள் ஆன பின்னரும் அவரது வழக்கில் இன்னும் விசாரணை முழுமையாக நடக்கவில்லை.

குற்றம் நிரூபிக்கப்படாத வரை ஒருவர் குற்றவாளி கிடையாது என்பதுதான் நீதித்துறையின் வழக்கம். ஆனால், உபா வழக்கில் அப்படி கிடையாது. சந்தேகம் என்று இருந்தாலே அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார். இந்த வழக்கில் எளிதில் ஜாமின் கிடைக்காது. உபா சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இருக்கிறது. இந்த சட்டம் குறித்து உச்சநீதிமன்றமே சமீபத்தில் சில வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கிறது. அதாவது விசாரணை முடியும் வரை ஒருவர் சிறையிலேய இருப்பது என்பது அரசியலமைப்பு அவருக்கு கொடுத்திருக்கும் உரிமைகளை மீறுவதாகும் என்று கூறியிருக்கிறது.
இப்படியெல்லாம் சொன்னாலும் கூட, உமர் காலித் இன்னும் பிணையில் விடுக்கப்படாமல்தான் இருக்கிறார். இந்த நிலையில்தான், அவருக்கு மம்தானி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "அன்புள்ள உமர், கசப்புணர்வைப் பற்றிய உங்களின் வார்த்தைகளையும், அது ஒருவரை அழித்துவிடக் கூடாது என்பது குறித்தும் நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். உங்களின் பெற்றோரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என குறிப்பிட்டிருக்கிறார்.
உமர் காலித்துக்கு மம்தானி ஆதரவு தெரிவிப்பது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். கடந்த 2023ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உமர் காலித்தின் சிறை நாட்குறிப்புகளை மம்தானி வாசித்து காட்டியிருந்தார்.
நியூயார்க் மேயராக பொறுப்பேற்ற பின்னர், தன் கைப்பட முதல் முறையாக உமர் காலித்துக்கு மம்தானி கடிதம் எழுதியிருப்பது சர்வதேச அளவில் உபா சட்டம் குறித்தும், உமர் காலித் விவகாரம் குறித்தும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
-
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications