ஒரு ரயில் விபத்து.. லீக்கான ஆபத்தான கெமிக்கல்! செத்து மடிந்த மீன், பறவைகள்! திணறும் அமெரிக்க மக்கள்
கிட்டத்தட்ட மக்கள் தற்போது அங்கே ஆசிட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
நியூயார்க்: அமெரிக்காவில் ஒகையோ மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து ஒன்று அங்கு மிகப்பெரிய இயற்கை பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் எல்லோரும் மாஸ்க் போட்டுகொண்டு வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஒகையோ நதியில் உள்ள நீரில் இருக்கும் மீன்கள் செத்துமடிவது, வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகள் மயங்கி விழுந்து பலியாவது தொடங்கி மக்கள் வாந்தி மயக்கம் என்று மருத்துவமனைக்கு செல்வது வரை பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக அங்கு நடந்து வருகின்றன.. அப்படி ஒகையோவில் என்னதான் நடந்தது?
அமெரிக்காவில் ஒகையோ மாகாணத்தில் இருக்கும் கிழக்கு பாலஸ்தீனத்தில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. கிழக்கு பாலஸ்தீனம் என்பது சிறிய ஊர் ஆகும். இதற்கும் பாலஸ்தீனம் நாட்டிற்கும் நேரடி தொடர்பு இல்லை. அமெரிக்காவில் ஒகையோ மாகாணத்தில் இருக்கும் கிழக்கு பாலஸ்தீனத்தில்தான் கடந்த பிப்ரவரி 3ம் தேதி ரயில் தடம்புரண்டது.
இந்த ரயில் விபத்து எதிர்பார்க்காத மிகப்பெரிய பேரழிவை தற்போது ஒகையோ மாகாணத்தில் ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது?
அங்கு உள்ள நோர்ப்பிலோக் சதர்ன் என்று ரயில்தான் தடம் புரண்டது. இதில் மொத்தம் 50 பெட்டிகள் இருந்துள்ளன. இது முழுக்க முழுக்க அதிக நச்சுத்தன்மை கொண்ட கேஸ்கள் இருந்துள்ளன. இதில் பெட்டிகள் தடம் புரண்டதும் உடனே ஒரு பெட்டி வெடித்துள்ளது. இதனால் மீதம் உள்ள பெட்டிகளை அங்கிருந்து எடுப்பது சிரமம் ஆகி உள்ளது. அதோடு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த ரயில் விபத்தால் மக்கள் யாரும் நேரடியாக பலியாகவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் வேறு மாதிரியான பாதிப்பு இங்கே ஏற்பட்டு உள்ளது.

என்ன மாதிரியான பாதிப்பு?
இந்த ரயிலை பெட்டிகளில் வினைல் குளோரைடு, பியூட்டைல் அக்ரிலைட் இரண்டும் திரவ நிலையில் இருந்துள்ளன. ரயில் பெட்டிகள் விழுந்ததும் அதில் இருந்து திரவ கெமிக்கல்கள் வெளியேறி அருகில் இருந்த நீர் நிலைகளில் கலந்துள்ளன. ஒகையோ மாகாணத்தில் இருக்கும் ஒகையோ ஆற்றில் இந்த கெமிக்கல் கலந்து உள்ளது. இதையடுத்து அந்த நதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் கிளை நதிகள் மூடப்பட்டன. ஆனாலும் அந்த நதி மொத்தமாக கெமிக்கல் கலந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு. சென்றுவிட்டது

கெமிக்கல்
இந்த கெமிக்கல்கள் பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் பிசின்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. இதுதான் தற்போது நீரில் கலந்து உள்ளது. இரண்டு கெமிக்கல்களுமே அதிக நச்சுத்தன்மை கொண்டது. உயிரை கூட கொல்லும் திறன் கொண்டது. பிளாஸ்டிக் பொருட்கள், பைப்புகள் உருவாக்க இந்த பொருள் பயன்படுத்தப்படும். இந்த ஆறு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்களுக்கு குடிநீரை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சுமார் 160 வகை மீன்களும் இங்கே உள்ளன. லட்சகணக்கில் இங்கே இருக்கும் மீன்கள் இதனால் செத்து மேலே மிதக்க தொடங்கி உள்ளன. இதனால் இந்த நீரை மக்கள் பயன்படுத்த கூடாது, நிலத்தடி நீரை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீன்கள்
இதனால் மீன்கள் மட்டுமின்றி அங்கே பறவைகள், விலங்குகள் கூட பலியாக தொடங்கி உள்ளன. இதற்கு காரணம் அங்கே நிலவும் புகை. இந்த நச்சு கெமிக்கல் மேலும் நீரில் கலப்பதை தடுக்க வினைல் குளோரைடை கொஞ்சம் கொஞ்சமாக தீ வைக்க ஒகையோ மாகாணம் முடிவு செய்தது. அங்கு இருந்த 5000 மக்களை வெளியேற்றிவிட்டு இந்த கெமிக்கல் தீ வைக்கப்பட்டது. ஆனால் அந்த கெமிக்கல் எரிந்து தற்போது பாஸ்ஜீன் மற்றும் ஹைட்ரஜன் குளோரைடு ஆக மாறி உள்ளது. பாஸ்ஜீன் என்பது மிகவும் நச்சுதன்மை கொண்ட வாயு ஆகும். இது வாந்தி மற்றும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும். முதல் உலகப் போரில் இது கெமிக்கல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. மக்களை மயக்கம் அடைய செய்ய குண்டுகளில் பயன்படுத்தப்பட்டது.

உருவாக்கி உள்ளனர்
இதைத்தான் ரயிலை கொளுத்திவிடுகிறேன் என்று பெயரில் இவர்கள் உருவாக்கி காற்றில் கலக்க விட்டுள்ளனர். அதேபோல் ஹைட்ரஜன் குளோரைடு காற்றில் உள்ள நீரில் கலந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டாக மாறும் . இது கண்கள், தோல் மற்றும் மேல் சுவாச அமைப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தும். கூடுதலாக, மக்களின் உணர்திறனை பாதிக்கும், தோல் அழற்சி மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இப்போது அங்கே தீ வைக்கப்பட்டு உள்ளதால் காற்று ஹைட்ரோ குளோரிக் கலந்து மேகங்களாக சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட மக்கள் தற்போது அங்கே ஆசிட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த பகுதியில் வாழும் பல விலங்குகள், பறவைகள் அடுத்தடுத்து செத்து மடிய தொடங்கி உள்ளன. மக்கள் பலர் மூச்சு விட முடியாமல் மாஸ்க் அணிந்து வெளியே வர தொடங்கி உள்ளனர். இது கிட்டத்தட்ட நிர்வாக தவறு காரணமாக ஏற்பட்ட பேரழிவு ஆகும். இதனால் மக்கள் அங்கே ஒகையோ மாகாண அதிகாரிங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இங்கே செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்க செய்தியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேரழிவு அங்கே பல மாதங்களுக்கு மக்கள் வாழ்க்கையில் இடையூறு ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications