நேரடியாக தாக்கும்.. ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்படும் புது அறிகுறி.. வல்லுனர்கள் விடுக்கும் வார்னிங்!
நியூயார்க்: ஓமிக்ரான் தாக்கிய நோயாளிகளுக்கு புதுவிதமான அறிகுறி ஒன்று ஏற்படுவதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா மூன்றாம் அலை ஏற்பட ஓமிக்ரான் கேஸ்கள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவில் 32 புரோட்டின் உருமாற்றங்கள் ஏற்பட்டு ஓமிக்ரான் கொரோனா உருவாகி உள்ளது.
இதனால் முதலில் பரவிய கொரோனாவை விட ஓமிக்ரான் மிகவும் வித்தியாசமான ஒன்றாக அமைந்துள்ளது. இதன் காரணமாக ஓமிக்ரான் அறிகுறிகளும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

அறிகுறிகள்
ஓமிக்ரான் இதற்கு முன்பு இருந்த டெல்டாவை போல இருதயத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை. இதனால் மூச்சு பிரச்சனை அறிகுறிகள் பெரும்பாலும் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்படுவது இல்லை. இது போக சுவை இழப்பு, வாசனை இழப்பு போன்ற அறிகுறிகளும் பெரும்பாலும் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்படுவது இல்லை. பலருக்கு ஓமிக்ரான் மைல்ட் கேஸ்கள் மட்டுமே ஏற்படுகின்றன.

புதிய அறிகுறி
இந்த நிலையில் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு புதிய வகையான அறிகுறி ஒன்று ஏற்படுவதாக அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ஓமிக்ரான் நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததில் இந்த புதிய அறிகுறிகளை கண்டுபிடித்து இருக்கிறது. ஓமிக்ரான் அறிகுறிகள் பொதுவாக இதயத்தில் இருந்து மூளை வரை நீள்கிறது.

காதில் வலி
இதில் சிலருக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் காதிலும் ஓமிக்ரான் அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஓமிக்ரான் நோயாளிகளின் காதுகளை சோதனை செய்ததில் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறோம். அதன்படி ஓமிக்ரான் நோயாளிகள் பலருக்கு காது வலி ஏற்பட்டுள்ளது. பலருக்கு காதில் "கிங்க்க்க்" என்ற சத்தம் கேட்டபடி இருந்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பு ஏற்படும் முன்பு இந்த அறிகுறி பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

காது அடைக்கும்
இன்னும் சிலருக்கு காது அடைத்துக்கொள்ளும் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு காதில் விசில் அடிப்பது போன்ற சத்தமும் ஏற்பட்டுள்ளது. 2 டோஸ் வேக்சின் எடுத்துக்கொண்டவர்களுக்கும் கூட இந்த ஓமிக்ரான் அறிகுறி இருந்துள்ளது. இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்களுக்கு ஓமிக்ரான் இருக்கும் வாய்ப்புகள் உள்ளதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.

பொதுவான அறிகுறிகள்
இது போக ஓமிக்ரான் கொரோனாவிற்கு ஏற்படும் மற்ற சாதாரண அறிகுறிகள் பின்வருமாறு,
- உடல் கூச்சம்/குளிர்
- தொண்டை கரகரப்பு
- உடல் வலி
- காய்ச்சல்
- உடல் வலிமையற்று இருப்பது
- வாந்தி எடுப்பது
- இரவில் வியர்ப்பது
- இருமல்
- மூக்கில் சளித்தொல்லை
- சோம்பல்
- தலைவலி
ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications