OpenAI முறைகேடு.. அம்பலப்படுத்திய இந்திய இளம் ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் மர்ம மரணம்!
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் இதில் நடக்கும் முறைகேடுகள் வெளியில் அவ்வளவாக தெரிவதில்லை. இப்படியான மோசடிகள் குறித்து பகிரங்கமாக பேசியவர்தான் இந்திய-அமெரிக்க இளம் ஆராய்ச்சியாளரான சுசீர் பாலாஜி. இவர் அமெரிக்காவில் தனது வீட்டில் மர்மமாக இறந்து கிடந்திருக்கிறார்.
இந்தியாவை சேர்ந்த இவர், அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்துவந்திருக்கிறார். OpenAI-ல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது ChatGPT-ஐ உருவாக்கிய குழுவில் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறார். இது தவிர WebGPT மற்றும் GPT-4 போன்ற பிற திட்டங்களிலும் வேலை பார்த்திருக்கிறார்.

இவ்வளவு பெரிய பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் இதை வைத்து மேலும் பெரிய நிறுவனத்தில் சேர்ந்து காசு பார்ப்பார்கள். ஆனால் சுசீர் பாலாஜி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இருக்கும் பிரச்சனையை மக்கள் மத்தியில் பேச தொடங்கியிருக்கிறார். தனக்கான அனுபவத்தை மக்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அதாவது காப்புரிமை தரவை OpenAI நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு டெக் உலகில் தலைப்பு செய்தியாக மாறியது. இந்த விவகாரம் குறித்து சுருக்கமாக சொல்வதெனில், OpenAI-ல் நாம் கேட்கும் கேள்விகளுக்கு அது பதிலளிக்கிறது. அந்த பதில் எங்கிருந்து பெறப்படுகிறது? பெரும்பாலும் ஆய்வு முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. எனவே இந்த ஆய்வை செய்தவரிடம் காசு கொடுத்து அந்த முடிவுகளை வாங்க வேண்டும். ஆனால் OpenAI இதை செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.
OpenAI-ல் நாம் ஒரு படத்தை கேட்கிறோம் எனில், அது கிராபிக்ஸ் பயன்படுத்தி வரைந்து கொடுக்கும். ஆனால் உலகம் முழுவதும் இதுவரை எடுக்கப்பட்டு இன்டெர்நெட்டில் பதிவேற்றப்பட்ட படங்களை சற்று எடிட் செய்துதான் OpenAI கொடுக்கும். அப்படியெனில் OpenAI கொடுக்கும் கிராப்பிஸ் படங்களுக்கு மூலாதாரம் ஏற்கெனவே எடுக்கப்பட்ட படங்கள்தான். இந்த படங்களுக்கு காப்பிரைட் வாங்கியிருக்க வேண்டும். இதையெல்லாம் OpenAI செய்யவில்லை என்று சுசீர் பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார்.
வணிகங்கள், தொழில்முனைவோரை இந்த OpenAI கடுமையாக பாதிக்கிறது. OpenAI தகவல்கள் ChatGPT ஐப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், "நான் சொல்வதை நீங்களும் நம்பினால், இந்நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். இது ஒட்டுமொத்த இணைய சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒன்று கிடையாது" எனவும் சுசீர் கூறியிருந்தார். இதுதான் அவருடைய கடைசி ஸ்டேட்மென்டாக இருந்தது.
இந்த குற்றச்சாட்டுகள் சலசலப்பை கிளப்பியிருந்த நிலையில் கடந்த நவம்பர் 26ம் தேதி தனது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் குறித்து உரிய விசாரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications