காதலியுடன் படுக்கையை பகிர்ந்த ஓனர்.. பார்த்ததும் ‛பிட்புல்’ நாய் செய்த சம்பவம்.. எல்லாமே போச்சு
நியூயார்க்: அமெரிக்காவில் காதலியுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருந்த ஓனரை பார்த்ததும் அவர் செல்லமாக வளர்த்து வரும் ‛பிட்புல்' நாய் துள்ளிக்குதித்து பாய்ந்தது. அப்போது ஏற்பட்ட விபரீதத்தில் அந்த ஓனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
நம்மில் பலரும் வீட்டில் செல்லமாக நாய், பூனைகளை வளர்ப்போம். நம் வீட்டில் ஒருவர் போல் பார்த்து பார்த்து உணவு வழங்குவது, வெளியூர் செல்லும்போது உடன் அழைத்து செல்வது உள்ளிட்டவற்றை நாம் செய்து இருப்போம்.

அதேபோல் பலரது வீடுகளில் செல்ல பிராணி பெட்ரூம் வரை வந்து செல்லும். இப்படி நீங்களும் செல்லப்பிராணி வளர்க்கிறீர்கள்? என்றால் கொஞ்சம் உஷாராக இருங்கள். இல்லாவிட்டால் உங்களின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். ஏனென்றால் அமெரிக்காவில் ஒருவர் தான் செல்லமாக வளர்க்கும் நாய் செய்த தவறால் நூலிழையில் உயிர் தப்பி உள்ளார்.
இந்த சம்பவம் என்பது அமெரிக்காவின் டென்னசி பகுதியில் நடந்துள்ளது. அதாவது டென்னசியில் உள்ள ஒயிட்னி அவென்யூவில் வசிப்பவர் ஜெரால்டு கிர்க்வுட். இவர் தனது வீட்டில் ‛பிட்புல்' இனத்தை சேர்ந்த நாயை வளர்த்து வருகிறார். இந்த நாய்க்கு ஒரு வயது ஆகிறது. இதற்கு அவர் அதிக செல்லம் கொடுப்பார். வெளியே எங்கு சென்றாலும் நாயையும் தன்னுடன் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். வீட்டில் அனைத்து அறைகளுக்கும் இந்த நாய் சென்று உலா வரும்.
இந்நிலையில் தான் ‛பிட்புல்' நாயை வளர்க்கும் ஜெரால்டு கிர்க்வுட் தனது காதலியை வீட்டுக்கு அழைத்து வந்தார். இருவரும் பெட்ரூமில் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த சமயத்தில் திடீரென்று ‛பிட்புல்' நாய் அவரது படுக்கைக்குள் நுழைந்துள்ளது. ஜெரால்டு கிர்க்வுட்டை பார்த்த மகிழ்ச்சியில் பெட் மீது துள்ளிக்குதித்த ‛புட்புல்' நாயின் கால்கள் அருகே இருந்த துப்பாக்கியின் மீது பட்டுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, ‛பிட்புல்'நாயின் உரிமையாளரின் தொடையில் பாய்ந்தது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளது. தற்போது ஜெரால்ட் கிரிக்வுட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி மெம்பிஸ் போலீஸ் துறை விசாரணையை தொடங்கி உள்ளது. சம்பவம் பற்றி ஜெரால்ட் கிரிக்வுட் மற்றும் அவரது காதலி போலீசாரிடம் விளக்கம் அளித்தனர். இதையடுத்து எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறி
ஜெரால்டு கிர்க்வுட் காயமடைந்ததாக வழக்கு என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் டென்னஸ் பாதுகாப்பு பிரிவு சார்பில், ‛‛வீட்டில் இருக்கும் துப்பாக்கியை மக்கள் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். அந்த துப்பாக்கி மூலம் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதன் உரிமையாளர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதனால் வீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் நெருங்காத வகையில் துப்பாக்கிகளை வைக்க வேண்டும்'' என்று அறிவுரை என்பது வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications