திடீரென தீப்பிடித்து எரிந்த விமானத்தின் டயர்.. உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிய பயணிகள்! ஷாக்
நியூயார்க்: அமெரிக்காவின் டென்வர் நகரில் பயணிகள் விமானம் ஒன்று தீ விபத்தில் சிக்கியிருக்கிறது. விமானத்தின் டயர் தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அவசர கதவு வழியாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு இறங்கி ஓடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மியாமிக்கு புறப்படவிருந்த இந்த விமானம் புறப்படுவதற்கு முன்பே நிறுத்தப்பட்டது.

விமானத்தில் மொத்தம் 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், விமானத்தில் இருந்து புகை வெளியேறுவதை காண முடிகிறது.
விமான நிறுவனத்தின் அறிக்கை
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், "அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எங்கள் பராமரிப்பு குழு விமானத்தை ஆய்வு செய்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
This is becoming routine for airline travel. This is American Airlines in Denver.
— Spitfire (@DogRightGirl) July 26, 2025
Rear wheels blew. pic.twitter.com/NJ7akXtNB9
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், பயணிகள் அவசர கால வழிகளை பயன்படுத்தி விமானத்தை விட்டு வெளியேறுவதைக் காணலாம். மேலும், விமானத்தின் இடது பின்புறத்தில் இருந்து புகை வெளியேறுவது தெளிவாக தெரிகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள்
விமான நிறுவனத்தின் தகவலின்படி, அனைத்து பயணிகளுக்கும் மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும். காயம் அடைந்த பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். தீ விபத்து குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications