Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப்பிற்கு போன மெசேஜ்.. அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் மோடி அனுப்பிய கடிதம்.. என்ன நடக்குது? முக்கியம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பார்க்க சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடி சார்பாக கடிதம் ஒன்றை கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக இன்று டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். ஆனால் இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவில்லை. இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில்.. ஏன் இந்த முறை மோடி பெயரை கூட எங்கும் டிரம்ப் சொல்லவில்லை.. அதோடு டிரம்ப் ஏன் மோடியை அழைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியர்கள் பலர் அவருக்கு ஆதரவாக இருந்தும் மோடி பெயரை எங்கும் டிரம்ப் பேசவில்லை. அது உண்மை என்றால் ஏன் அழைப்பு போகவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் போய்விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

us presidential election 2024 kamala harris donald trump 2024

அமைச்சர் ஜெய்சங்கர் பதவி ஏற்பு:

வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின் போது, ​​அமெரிக்க நிர்வாகத்தின் புதிய பிரதிநிதிகளுடனும், புதிய அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பார்க்க சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடி சார்பாக கடிதம் ஒன்றை கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பர்சனலாக மோடி எழுதிய கடிதம் இது என்று கூறப்படுகிறது.

டிரம்ப் அமைச்சரவை:

அமெரிக்காவில் இந்தியா, யு.கே போன்ற ஆட்சி முறை கிடையாது. இதனால் அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அதிபர் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு.. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள்.

வெளியுறவுத்துறை அமைச்சர்:

அமெரிக்காவில் மிக முக்கிய அமைச்சரவை பொறுப்பான வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு டிரம்ப் தனக்கு நெருக்கமான செனட்டர் மார்கோ ரூபியோவை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியை கொண்டு வர டிரம்ப் இருப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சிக்கு.. வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்பின் 2024 பிரச்சாரத்தின் போது அதில் முக்கிய பங்கு வகித்தவர் ரூபியோ. இவரின் தேர்வு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்: டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுமாறு மைக் வால்ட்ஸை அழைத்துள்ளார் என்கிறார்கள். இவர் முன்னாள் ராணுவவீரர் . கடுமையான சீன எதிர்ப்பாளர். சீனாவை கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர் . ரஷ்யாவை உக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் எதிர்பார்க்கும் நிலையில் இவரின் வருகை கவனம் பெற்றுள்ளது.

எல்லைகள் பாதுகாப்பு: தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்க உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு வந்துள்ளார். டிரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தில் மூத்த குடியேற்ற அதிகாரியான தாமஸ் டி. ஹோமன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்த பணியை சிறப்பாக செய்தார். அதோடு அகதிகள் குடியேற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த தேர்தலில் அகதிகள் விவகாரம் உச்சத்தில் இருந்தது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் முறைகேடாக குடியேறுவதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை நிர்வாகி: லீ செல்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை நிர்வாகியாக முன்னாள் பிரதிநிதி லீ செல்டின் நியமிக்கப்பட உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் கவர்னராகப் போட்டியிட்ட டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான செல்டின் தீவிரமான குடியரசு கட்சிக்காரர்.

விவேக் ராமசாமி:

இப்போது ஜேடி வேன்ஸ் துணை அதிபர் ஆகிறார். இதனால் ஒஹையோ மாகாண செனட் பதவி காலியாகிறது. இந்த பதவிக்கு விவேக் ராமசாமி முயல்வார் என்கிறார்கள்.

சிஐஏ தலைவர் :

சிஐஏ இயக்குனர் பதவிக்கு குஜராத் பின்புலத்தை கொண்ட காஷ்யப் காஸ் பட்டேல் நியமிக்கப்படவுள்ளாராம். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். கடந்த டிரம்ப் ஆட்சியில்.. அவர் வெற்றிபெற ரஷ்யா காரணம் என்று புகார் வைக்கப்பட்டது. இந்த விசாரணையில் டிரம்பிற்கு பெரிய உதவியாக இருந்தது காஷ்யப் காஸ் பட்டேல்தான்.அதேபோல் டிரம்ப்பின் முந்தைய ஆட்சியில் பல முக்கியமான உளவு தகவல்கள்.. உளவு ரீதியான முடிவுகளை எடுக்க காஷ்யப் காஸ் பட்டேல் டிரம்பிற்கு காரணமாக இருந்தார். காஷ்யப் காஸ் பட்டேல் சிஐஏ தலைவராகும் முடிவை டிரம்ப் முன்பே எடுத்துவிட்டார். ஆனால் இதற்கு செனட் சபை அனுமதி அளிக்க வேண்டும். இரண்டு அவையிலும் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். செனட் சபையை கைப்பற்றிவிட்டார். இதன் காரணமாக காஷ்யப் காஸ் பட்டேல் சிஐஏ இயக்குனர் ஆவதில் சிக்கலே இருக்காது என்கிறார்கள். காஷ்யப் காஸ் பட்டேல் சிஐஏ தலைவராக முடியாத பட்சத்தில் அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

பாதுகாப்பு துறை அமைச்சர்:

ஆர்ம்ட் சர்வீசஸ் தலைவர் ரெப். மைக் ரோஜர்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

தலைமை அதிகாரி: வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாகத் தனது பிரச்சார குழு மேலாளர் சுசி வைல்ஸை நியமித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் இந்த பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+