அமெரிக்காவில் கால் பதிக்கும் மோடி.. அதற்கு முன் டிரம்ப்பை சமாதானம் செய்ய.. வெள்ளைக்கொடி ட்ரிக்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அடுத்த வாரம் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இதற்காக அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்பு விழாவிற்கு இந்த முறை மோடி அமெரிக்கா செல்லவில்லை. அதோடு டிரம்ப் மோடியின் வாழ்த்து கடிதத்திற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. டிரம்ப் இதுவரை எங்கேயும் மோடி பெயரை குறிப்பிடவே இல்லை.

usa donald trump visa

ஏன் இந்த முறை மோடி பெயரை கூட எங்கும் டிரம்ப் சொல்லவில்லை.. அதோடு டிரம்ப் ஏன் மோடியை அழைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியர்கள் பலர் அவருக்கு ஆதரவாக இருந்தும் மோடி பெயரை எங்கும் டிரம்ப் பேசவில்லை. அது உண்மை என்றால் ஏன் அழைப்பு போகவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் போய்விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெளியேற்றம்:

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவில் அத்துமீறி குடியேறிய இந்தியர்கள் பலர் மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இந்தியர்களை இந்தியாவை நோக்கி நாடு கடத்த தொடங்கி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

சட்டவிரோத இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் வந்தது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு கட்டமாக அமெரிக்க ராணுவ விமானம், அமெரிக்காவில் உள்ள 11 மில்லியன் ஆவணமற்ற குடியேறிகளை வெளியேற்ற தொடங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியர்கள் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டு உள்ளனர். ராணுவ விமானத்தில் இந்தியர்களின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு உள்ளது. இப்படி கை, கால்களை கட்டிய பின்பே 48 மணி நேரம் அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சமாதானம்:

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அடுத்த வாரம் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இதற்காக அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக ஆடம்பர கார்கள், சோலார் செல்கள் மற்றும் ரசாயனங்கள் உட்பட 30 க்கும் மேற்பட்ட அமெரிக்க பொருட்களின் மீதான இறக்குமதி வரியை மறுஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது உலகளாவிய வர்த்தக பதட்டங்கள் அதிகரிக்கும் போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க வழிவகுக்கும்.

அமெரிக்காவை சமாதானம் செய்ய உதவும். அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தை முன்னிட்டு, இறக்குமதி கட்டணங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிகரித்து வரும் இறக்குமதி வரி நடவடிக்கைகளைத் தவிர்க்கும் முயற்சியில், இந்தியா ஏற்கனவே சமீபத்திய பட்ஜெட்டில் பல பொருட்களின் சராசரி இறக்குமதி வரி விகிதங்களை 13% இலிருந்து 11% ஆகக் குறைத்துள்ளது.

அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியை குறைக்க ஆலோசனை செய்து வருகிறதாம். அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாம். சோயாபீன், பால், வாகனங்கள், மருத்துவ கருவிகள் மற்றும் விமானங்கள் , எலக்ட்ரானிக்ஸ், ஹைடெக் இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடமிருந்து அதிகமான பொருட்களை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரசாயனங்கள் கொள்முதலை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகம் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. அதோடு டாலர் வர்த்தகத்தை விட்டு மாற மாட்டோம் என்று இந்தியா மீண்டும் உறுதி அளிக்கும் என்கிறார்கள் . ஏற்கனவே டாலரில் வர்த்தகம் செய்யவே விரும்புவதாகவும்.. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வருவதில் ஆதரவு இல்லை என்று பிரிக்ஸ் நாடுகளுக்கு இந்தியா தகவல் அனுப்பி உள்ளதாம். அதிகாரபூர்வமற்ற ஆலோசனைகளில் பிரிக்ஸ் நாடுகளிடம் இந்தியா இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+