Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உயர்ந்த ரத்த கைகள்.. இஸ்ரேலுக்கு நிதியா? பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மக்கள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 26வது நாளாக இன்றும் தாக்குதலை தொடுத்திருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது இயல்பானதுதான். இப்படி இருக்கையில் 2011க்கு பின்னர் எந்த மோதல் போக்கும் எழவில்லை. ஆனால் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு இப்படியான அச்சுறுத்தல் இருப்பது ஏற்கெனவே தெரியும். எனவே அது தனது பாதுகாப்புக்காக 'அயன் டோம்' அமைப்பை உருவாக்கி வைத்திருந்தது. சோகம் என்னவெனில் இந்த வலுவான தடுப்பையும் மீறி ஹமாஸ் ஏவிய ராக்கெட்கள் இஸ்ரேலுக்குள் பாய்ந்தது. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.

 Protest in the US Congress against funding Israel

இதற்கான பதில் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை தொடங்கியுள்ளது. ஹமாஸை அழிப்பதாக கூறி கடந்த 25 நாட்களாக இஸ்ரேல் விமானப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வந்தது. 26வது நாளாக இன்றும் இது நீடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் 8,525 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 26ம் தேதி வரை வான் வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் அதன் பின்னர் தரைவழி ஊடுருவலை தொடங்கியது. போர் தீவிரமடைந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.

இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும், சீனாவும் தீர்மானங்களை முன்வைத்தன. ஆனால் இந்த தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்துவிட்டது. இதன்பின்னர் கடந்த 25ம் தேதியன்று நடைபெற்ற ஐநா பொதுக்குழு கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்து ஜோர்டன் சார்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதன் மீது மொத்தமுள்ள 195 நாடுகளும் தங்கள் கருத்தை பதிவு செய்தன. அதில் 14 நாடுகள் எதிராகவும், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமலும் புறக்கணித்தன. மற்ற நாடுகள் வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் தற்போது வலியுறுத்தியுள்ளது. கடந்த 27ம் தேதி வரை வான்வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலில் மும்முரமாக இறங்கியுள்ளது. பொதுமக்களின் கார்களை பீரங்கி கொண்டு சுட்டு வீழ்த்துவதை போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இது இஸ்ரேலின் கொடூர முகத்தை காட்டுவதாக பாலஸ்தீன ஆதரவு நாடுகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள அமெரிக்க அரசை, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் புகுந்து போராட்டக்காரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் சென்ட அவையிடம் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் கோரிக்கை வைத்தார். அப்போது அவையில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த சிலர் தங்கள் கைகளை உயர்த்தினர். அவர்களின் கைகள் முழுவதும் ரத்தம் போல சிவப்பு நிற பெயின்ட் பூசப்பட்டிருந்து. அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிப்பவர்களின் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே இப்படி நூதன போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதேபோல 'இஸ்ரேலுக்கு உதவித்தொகை எதுவும் வழங்கக்கூடாது' என எழுதப்பட்ட பதாகைகளையும் சிலர் கையில் ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை காவல்துறையினர் அவையிலிருந்து அப்புறப்படுத்தினர். சமீபத்தில்தான் உக்ரைன் மட்டுமல்லாது இஸ்ரேலுக்கும் சேர்த்து சுமார் ரூ.8.8 லட்சம் கோடி கொடுக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டார்ன. இதனையடுத்துதான் செனட் அவையிடம் பிளிங்கன் அனுமதி கேட்டார்.

கடந்த சில நாட்களாக அமெரிக்கா மட்டுமல்லாது இஸ்ரேலுக்கு ஆதரவு தெரித்துள்ள பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு மேற்கு நாடுகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+