அணு ஆயுதம் இருந்தால் என்ன? உலகமே எதிர்த்தாலும்.. தனியாளாக ரஷ்யாவை அடித்து காலி செய்த உக்ரைன்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவிடம் உலகிலேயே அதிக அளவில் அணு ஆயுதங்கள் இருந்தும் கூட உக்ரைன் தொடர்ச்சியாக ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் நேற்று ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக பெரிய அளவில் எந்த நாடும் துணை நிற்கவில்லை. தொடக்கத்தில் நட்பாக நெருக்கமாக இருந்த நேட்டோ நாடுகளும் கூட இப்போது அதே நெருக்கத்தை கடைபிடிக்கவில்லை. அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக திரும்பி உள்ளார்.

அமெரிக்காவுடன் மோதல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர்.

இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். டிரம்ப் செய்தது பெரிய தவறு.. அவர் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ரஷ்யாவிற்கு புதிய பலத்தை கொடுக்கும். ரஷ்யா இதனால் நம்பிக்கையாக இருக்கும். இதனால் உக்ரைனுக்கும், நேட்டோ நாடுகளுக்கும்தான் ஆபத்து காத்திருக்கு.

Russia is a Nuclear state still Ukraine didn t mind before attacking it with drone

ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே என்னிடம் பேசும் முன் டிரம்ப் புடினிடம் பேசியது தவறு. இப்போது என்னை சந்திக்கும் முன்பாக புடினை டிரம்ப் சந்திப்பது பெரிய தவறு, என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் எச்சரித்து இருந்தார்.

இந்த போன் கால் சிறப்பாக இருந்தது.. நீண்ட நேரம் பேசினோம்.. பயனுள்ளதாக இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போன் கால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்ததாகவும், "இருவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று புடினும் டிரம்பும் ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்யா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இருவரும் ரஷ்ய - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் பேசியது இதில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

எதிர்ப்பு

இப்படி அமெரிக்காவின் நட்பு உடைந்துட்டது.. நேட்டோ படைகள் உதவி செய்வது இல்லை.. போர் சூழல் மோசமாக உள்ளது போன்ற கடுமையான நிலைகள் உள்ளன. அதிலும் ரஷ்யாவிடம் டன் கணக்கில் அணு ஆயுதங்கள் உள்ளன. உக்ரைனிடம் அணு ஆயுதம் இல்லை.

உதாரணமாக இந்தியா - பாகிஸ்தான் போர் ஒரே வாரத்தில் முடிய முக்கிய காரணம் அணு ஆயுதம். எந்த நாடாவது அணு ஆயுதத்தை கையில் எடுக்கோமோ என்ற அச்சம் அந்த போரில் நிலவியது. ஆனால் இங்கே ரஷ்யாவிடம் உலகிலேயே அதிக அளவில் அணு ஆயுதங்கள் இருந்தும் கூட உக்ரைன் அஞ்சாமல் தொடர்ச்சியாக ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் நேற்று ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நாட்டின் டிரோன்கள் ரஷ்யா மீது நேற்று இரவு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது.

இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவின் குண்டு போடும் போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது.

மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ விமானநிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தவிர, நாட்டின் அனைத்து இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக ரஷ்யா கூறி உள்ளது.

சிறிய ரக சூசைட் டிரோன்களை கருப்பு உள்ளிட்ட நிறங்களில் பெயிண்ட் செய்து, மிக தாழ்வாக ரேடாரில் படமால் பறக்கவிட்டு, போர் விமானங்கள் ஹேங்கரில் இருக்கும் போது அருகில் சென்று அதை தாக்கி அழித்து உள்ளது உக்ரைன். சிறிய ரக டிரோன்கள் என்பதால் இதனால் மொத்தமாக போர் விமானங்களை அழிக்க முடியாது.

ஆனால் இவை சூசைட் டிரோன்கள். நேராக போர் விமானங்கள் மீது விழுந்து வெடித்து விமானங்களை தீ பிடிக்க வைக்கும். அப்படித்தான் இந்த தாக்குதல்கள் உக்ரைன் நடத்தி உள்ளது. இதில் மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் ஆகியவை ரஷ்யாவின் போர் விமானப்படை தளங்களில் முக்கியமானது ஆகும். இதனால் ரஷ்யாவின் விமானப்படை மிக மோசமான, எதிர்பார்க்காத சேதங்களை சந்தித்து உள்ளது.

300க்கும் மேற்பட்ட டிரோன்களை ஒரே சமயத்தில் அனுப்பி ரஷ்யாவின் விமானப்படையை உக்ரைன் அடித்து நொறுக்கி உள்ளது. இதன் மூலம் இரண்டு நாட்டு போர் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது. போர் கடுமையான நிலையை அடைந்து உள்ளது.

இதற்கு பதிலடி தர ரஷ்யா மிக கடுமையான முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா அடுத்த எந்த கட்டத்திற்கும் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+