முடிஞ்சா ஈரான் அணு உலையை தாக்குங்க.. பல நூறு ரஷ்யர்கள் உள்ளே இருக்காங்க! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: புஷேரில் ஈரான் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. அங்கே நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். அவர்கள் அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

புஷேரில் ஈரான் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் செர்னோபில் போன்ற பேரழிவு ஏற்படும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனத் தலைவர் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். புஷேர் அணுமின் நிலையம் ஈரானின் ஒரே ஒரு செயல்பாட்டில் உள்ள அணுமின் நிலையமாகும், இதனை ரஷ்யாவே கட்டியது.

புஷேர் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து ரஷ்யா எச்சரிக்கை

செயல்பாட்டில் இருக்கும் முதல் அணு மின் உற்பத்தி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது செர்னோபில் பேரழிவுக்கு ஒப்பானதாக இருக்கும். அணு உலையில் ராணுவ ரீதியாக தலையிட வேண்டாம் என்று வாஷிங்டனை நாங்கள் குறிப்பாக எச்சரிக்க விரும்புகிறோம், இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும், இதன் விளைவுகள் கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும், என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Russian nuclear experts are working in Iran and they are not going anywhere says Russia to Israel

அணு ஆயுத பேரழிவு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் போக்கு குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது சர்வதேச சட்டத்தின் பார்வையில் சட்டவிரோதமானது.. இதனால் அணுக்கசிவு ஏற்படும்.. இதன் காரணமாக உலகம் முழுக்க அணு ஆயுத பேரழிவு ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது சர்வதேச பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்களை உருவாக்கும். இஸ்ரேல் உட்பட உலகம் முழுவதும் இதன் விளைவுகள் எதிரொலிக்கும். இது அணு ஆயுத பேரழிவை நோக்கி தள்ளும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா இஸ்ரேல் அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "இஸ்ரேல் தலைவர்கள் விழித்துக்கொண்டு, ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஈரான் அணு நிலையங்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்.. இல்லையென்றால் நிலைமை மோசமாகும். அணு கசிவு ஏற்பட்டால் அதை தடுக்க முடியாது. வளைகுடா நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்" என்று வலியுறுத்தி உள்ளது.

மேலும், ஐ.நா.,வின் அணு ஆயுத கண்காணிப்பு அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் அணுசக்தி வளாகத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விரிவான அறிக்கையை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று ரஷ்யா கூறி உள்ளது. .

பெரும்பாலான நாடுகள் இஸ்ரேலின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. அதே சமயம் சில நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், சந்தர்ப்பவாத காரணங்களுக்காகவும் செயல்படுகின்றன என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

புஷேரில் ஈரான் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. அங்கே நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். அவர்கள் அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+