மனிதகுல வரலாற்றில் மகத்தான சாதனை! கனவுகள் மூலம் தகவல் பரிமாற்றம்.. சாதித்து காட்டிய விஞ்ஞானிகள்!
நியூயார்க்: ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மொழி முக்கியம். நாம் பேசுவதன் மூலம் மொழியை பயன்படுத்தி அடுத்தவரை தொடர்பு கொள்கிறோம். ஆனால், கனவு மூலம் ஒருவரை தொடர்பு கொள்ள முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இதைத்தான் அமெரிக்க ஆய்வாளர்கள் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இயங்கி வரும், REMspace எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வாளர்கள், கனவு மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வுக்காக ஒரு ஆண், ஒரு பெண் என இருவரை தேர்ந்தெடுக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் கனவுகளை அடையாளம் காண பயிற்சி கொடுக்கப்பட்டது. அதாவது தூக்கத்தில் 'ரெம்' எனும் ஒரு கட்டம் இருக்கிறது.

இந்த கட்டத்தில் நாம் காணும் கனவுகளை நம்மால் அடையாளம் காண முடியும். ஆனால் இதை தொடர்ந்து அடையாளம் காண முறையான பயிற்சி அவசியம். இதன் மூலம் நாம் என்ன கனவு கண்டுக்கொண்டிருக்கிறோம் என்பதையும், கனவில் நமக்கு தேவையான சில மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும். இந்த பயிற்சியை பெற்ற இருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சோதனையில், முதலில் ஆண் நபர் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றார். பின்னர் சில விநாடிகளில் 'ரெம்' நிலையை அடைந்தார். அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க சில பிரத்யேக கருவிகள் அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்தன. ரெம் நிலையை இவர் அடைந்ததும், அவர் காதில் பொருத்தப்பட்டிருக்கும் ஹெட் போனுக்கு கம்ப்யூட்டரிலிருந்து 'ஜிலாக்' எனும் வார்த்தை 'ரெமியோ' மொழியில் அனுப்பப்பட்டது.
ரெமியோ என்பது சிறப்பு கணினி மொழியாகும். இந்த வார்த்தையை முதல் நபர் தனது கனவில் உச்சரித்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்து 8 நிமிடங்கள் கழித்து, இரண்டாவதாக பெண் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று ரெம் நிலையை எட்டியுள்ளார். முதல் நபர் கேட்ட, 'ஜிலாக்' எனும் வார்த்தையை அவரும் கேட்டிருக்கிறார். ஆனால் கம்யூட்டரிலிருந்து அவருக்கு இந்த வார்த்தை அனுப்பப்படவில்லை. அப்படியெனில் இந்த வார்த்தையை அவர் எப்படி கேட்டிருப்பார்?
ஆக தூக்கத்தின்போது கனவு வழியாக தகவல் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இப்படி நடப்பது இதுவே முதல்முறை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னர் இது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தது வந்தன. ஆனால் அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் முதல் முறையாக இந்த ஆய்வின் மூலம், கனவு மூலம் கருத்து பரிமாற்றம் என்பது வெறும் கருத்து கிடையாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விளக்கிய ஆய்வாளர்கள், "இந்த ஆய்வு கடந்த செப்.24ம் தேதி நடத்தப்பட்டிருக்கிறது. சுமார் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
கனவை ஆய்வு செய்வதன் மூலம் ஒருவரின் உளவியலை நன்கு புரிந்து கொள்ள முடியும். மனம் சார்ந்த சிக்கல்கள், பிரச்சனைகளுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். ஆக கலிஃபோர்னியாவில் நடந்த இந்த ஆய்வு, மனிதகுல வளர்ச்சியை மேலும் ஓரடி முன்னோக்கி நகர்த்தியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் பெருமை அடைந்துள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications