பூஞ்சை தொற்று, ஸ்பேஸ் குப்பைகள்.. சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ளும் ஆபத்து.. விஞ்ஞானிகள் அச்சம்
நியூயார்க்: கடந்த மாதம் ஸ்டார்லைனர் ஸ்பேஸ் ஷிப் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். இந்நிலையில், அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச அளவில் விண்வெளித்துறை ஆய்வில் அமெரிக்காவின் நாசா முன்னிலை வகிக்கிறது. பூமயிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு மனிதர்களை நாசா அழைத்து சென்று வருகிறது. சமீபத்தில் இந்த பணியை நாசா தனியார் வசம் ஒப்படைத்தது. இப்படித்தான் போயிங் நிறுவனம் உள்ளே வந்தது. போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அந்த வகையில் விண்வெளி வீரர்களை அழைத்து செல்லும் ஸ்பேஸ் ஷிப்பை தயாரிக்க முன் வந்தது.

அப்படித்தான் 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப் தயாரிக்கப்பட்டது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இது சுனிதா வில்லியம்ஸ்ஸுக்கு மூன்றாவது பயணமாகும்.
ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ஸ்டார் லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் கடந்த 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி அதாவது நேற்று இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் மற்றும் ஹீலியம் வாயு கசிவு ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்நிலையில் விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதாவது விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் ஆய்வை மேற்கொள்வார்கள். சிறு, சிறு பூஞ்சைகளை வைத்து அது விண்வெளியில் எப்படி வளர்கிறது என்று ஆய்வை மேற்கொள்வார்கள். இது சில நேரங்களில் விண்வெளி வீரர்கள் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அடிக்கடி அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
ஆனால், தற்போது விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு பரிசோதனை செய்யும் வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே இவர்கள் இருவரும் பூஞ்சை தொற்று உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதேபோல பூமியை சுற்றி ஏராளமான குப்பைகள் வலம் வருகின்றன. இது சர்வதேச விண்வெளி மையத்திற்கு அருகில் வரும்போது அது தாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
விண்வெளியில் ராக்கெட்கள் ஏவப்படும் போது, அதன் தேவையற்ற பகுதிகள் தனியாக கழன்று விடும். இப்படியாகதான் விண்வெளி குப்பைகள் உருவாகிறது. லட்சக்கணக்கில் இருக்கும் குப்பைகளை ஆய்வாளர்கள் அளவின் அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள். 1-10 செ.மீ அளவில் சுமார் 2 லட்சம் குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 1 செ.மீக்கும் குறைவான குப்பை துகள்கள் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.
இந்த துகள்கள் சுமார் 26,000 கி.மீ வேகத்தில் பூமியை சுற்றி வருகின்றன. இது விண்வெளி வீரர்கள் மீது மோதினால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே, பாதுகாப்பாக இருக்க இடம் தேவைப்படுகிறது. தற்போது இவர்கள் இருவருக்கும் ஸ்டார் லைனர் விண்கலம்தான் பாதுகாப்பு கேடையமாக இருக்கிறது. ஆனால், இது நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. எனவே முடிந்தவரை உடனடியாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications