பூமி போன்றே மற்றொரு உலகம்.. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்! மனிதர்களால் வாழ முடியுமாம்
நியூயார்க்: பூமி போன்றே மற்றொரு உலகத்தை சுமார் 4,000 ஒளியாண்டுகள் தொலைவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் மனிதர்களால் உயிர் வாழ முடியும் என்றும் கூறியுள்ளனர்.
நாம் சூரிய குடும்பம் எனும் அமைப்பில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். சூரிய குடும்பம் என்பது சூரியனை மையமாக கொண்டது. சூரியன் ஒரு நட்சத்திரமாகும். ஒவ்வொரு நடத்திரத்திற்கும் ஆரம்பம், அழிவு இருக்கிறது. அந்த வகையில், நமது சூரியனும் இன்னும் 400 கோடி ஆண்டுகளில் அழிந்துவிடும். அப்படி நடந்தால் நமது பூமியும் அழிந்துவிடும். எனவே, இதற்கு முன்னதாக நாம் வேறு ஒரு இடத்தை பார்த்துக்கொண்டு நகர வேண்டும். இப்போது நமக்கு சில ஆப்ஷன்கள் இருக்கின்றன.

வியாழனைச் சுற்றியுள்ள யூரோபா, காலிஸ்டோ மற்றும் கேனிமீட் போன்ற நிலவுகள், அல்லது சனிக்கு அருகிலுள்ள என்செலடஸ் போன்ற நிலவுகளில் மனிதனால் குடியேற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆனால் இங்கு நீர் இல்லை. நீரை செயற்கையாக உருவாக்கினால்தான் நம்மால் இங்கு போக முடியும். எனவே, இதைவிட சிறப்பான கிரகம் ஏதேனும் இருக்கிறதா? என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் KMT-2020-BLG-0414 கோளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஹவாயில் உள்ள கெக் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பூமியை போலவே இருக்கிறது. அங்குள்ள ஒரு சிவப்பு நட்சத்திரத்தை இது சுற்றி வருகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த கிரகத்தில் தரைப்பகுதியும் நீரும் இருக்கிறது. மேலும் இதற்கு ஒரு நிலவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது 4000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதால், அங்கு செல்ல முடியும் என்பது சற்று சந்தேகம்தான் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அங்கு போக வேண்டும் எனில், ஒளியின் வேகத்தில் செல்லும் விண்கலத்தை உருவாக்க வேண்டும். இப்போது வரை இப்படியான எதையும் மனிதர்கள் உருவாக்கவில்லை. எனவே, இதற்கான ஆய்வுகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியின் அழிவு: ஏனெினல், நமது சூரியின் 400 கோடி ஆண்டுகளில் அழிகிறது எனில், பூமி 300 கோடி ஆண்டுகளிலேயே அழிந்துவிடும். அதாவது ஒவ்வொரு நட்சத்திரமும் இறக்கும்போது விரிவடையும். நமது சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதால், இதுவும் விரிவடையும். அப்படி நடக்கும்போது புதன், வெள்ளி மற்றும் பூமி ஆகிய கிரகங்களை சூரியன் தனக்குள் இழுத்துக்கொள்ளும். இப்படித்தான் பூமியின் அழிவு இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications