நம்ம எர்த் VS சூப்பர் எர்த்.. வரமா? சாபமா?விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வெளியான தகவல்.. என்னனு பாருங்க
சூப்பர் எர்த் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்
நியூயார்க்: சூரிய குடும்பத்தில் சூப்பர்-எர்த் இருந்தால் என்ன ஆகும் என்று விஞ்ஞானிகள் நடத்திய சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்ல மனிதர்களுக்கும் அடிப்படையில் இருக்கும் ஒரே கேள்வி, 'நாம் யார்? ஏன் இங்கு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்' என்பதுதான். இந்த கேள்விக்கான விடையை நம்முடைய விண்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த தேடலில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் மற்ற எல்லா விண்வெளி அதிசயமும். இப்படி அதிசயம் மட்டுமல்ல பல உண்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு சோதனையை செய்து பார்த்திருக்கின்றனர். இந்த சோதனையின் முடிவு சூரிய குடும்பத்தையே நிலைக்குலைய வைத்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது நமது சூரிய குடும்பத்தை போல பிரபஞ்சம் முழுவதும் கோடி கணக்கான சூரிய குடும்பங்கள் இருக்கின்றன.

சூரிய குடும்பம்
இதில் எதிலாவது பூமியை போன்று ஒரு கிரகம் இருக்கும் என்றும், இதில் உயிரினங்கள் வாழக்கூடும் அல்லது மனிதர் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இப்படி மற்ற சூரிய குடும்பங்களில் இருக்கும் கிரகங்கள் சூரியனுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருக்காது, மிகவும் தூரமாகவும் இருக்காது. இது சூப்பர்-எர்த் கிரகம் என அழைக்கப்படுகிறது.

பூமி
சுருக்கமாக சொல்வதெனில் நமது பூமியை போலவே இதுவும் ஒரு கச்சிதமான தொலைவில் அமைந்திருக்கும். இந்த தொலைவுதான் 'ஹாபிடபில் ஜோன்' என்று அழைக்கிறோம். இப்படி பல சூப்பர் எர்த்களை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். இதில் உயிரினங்கள் இருக்கும் என்று நம்புகிறோம். நமது பூமிக்கு இது மாற்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். ஆனால் நமது சூரிய குடும்பத்தில் இப்படி எந்த சூப்பர் எர்த் கிரகமும் கிடையாது. இங்குதான் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு சந்தேகத்தை கிளப்பினார்கள். அதாவது நமது சூரிய குடும்பத்தில் ஒரு சூப்பர் எர்த் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் அந்த சந்தேகம்.

சூப்பர்-எதிர்த்
கேட்கவே நல்லா இருக்கே. அப்போ இந்த காலநிலை மாற்றம், பிளாஸ்டிக், கர்பன் உமிழ்வு என இதபத்தியெல்லாம் கவலப்படாம நாம அங்க போயி செட்டில் ஆயிடலாம்னு யோசிச்சு ஒரு கற்பனை சூப்பர்-எர்த்தை வரைந்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்ததைப்போல இந்த இந்த சூப்பர்-எர்த் நமக்கு உதவி பண்ணாது என அப்புறம்தான் ஆய்வாளர்களுக்கு தெரிய வந்துள்ளது. நமது சூரிய குடும்பத்தில் சூப்பர் எர்த் எங்க வைக்க முடியும்னு யோசிச்சு பார்த்ததுல ஆய்வாளர்கள் செவ்வாய்க்கும்-வியாழனுக்கும் இடையேயான 'கேப்' ஓகே என முடிவெடுத்துள்ளனர்.

வியாழன்
ஏனெனில் சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தொலைவு 14 கோடி கி.மீ ஆகும். இதனை ஒரு வானியல் அலகு (AU) என்று சொல்லுவார்கள். அப்படியெனில் பூமிக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் சுமார் 4.2 AU தூரம் இருக்கிறது. இது சூரியனுக்கு இரண்டு முறை சென்று வருவதற்கு சமமான தொலைவாகும். இவ்வளவு பெரிய 'கேப்' இருப்பதால்தான் சூப்பர்-எர்த்தை இங்கு வைக்க ஆய்வாளர்கள் முடிவெடுத்தனர். இந்த இடத்தில் சூப்பர்-எர்த்-ஐ வைத்து இயக்கி பார்த்ததில், அது இதர கோள்களின் சுற்றுவட்ட பாதையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வியாழன் கோளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூமிVSசூப்பர்-எர்த்
போதுமே! வியாழன் ஒன்றே சூரிய குடும்பத்தை முற்றிலுமாக அழிக்க போதுமானதாகும். ஆக சூப்பர்-எர்த் வியாழனை தூண்டி அங்கிருந்து பூமியின் கதையை முடித்துவிடும். பூமி சூரிய குடுபத்திலிருந்து விலகி அம்போவென அந்தரத்தில் வெட்ட வெளியில் பறக்க தொடங்கிவிடும். நாமும் அழிந்துவிடுவோம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக சூப்பர்-எர்த் மற்ற சூரிய குடும்பத்திற்கு ஓகே. ஆன நம்ம சூரிய குடும்பத்திற்கு தேவையில்லை என ஆய்வாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications