அதானியின் சர்வதேச பங்குகளில் செபி தலைவர் முதலீடு.. செபி மீது ஹிண்டன்பர்க் பரபர குற்றச்சாட்டு.. ஷாக்
நியூயார்க்: அமெரிக்காவைச் ஹிண்டன்பர்க் ரிசர்ச் இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளார். அதனால்தான் அதானி மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் சரமாரி புகார்களை வைத்தது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வேகமாக சரிந்தன. இந்த அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 31 சதவிகிதம் சரிவை பதிவு செய்தது. அப்போது ஏற்பட்ட சரிவில் இருந்து இன்று வரை அதானி குழுமம் மீளவில்லை.

மிகப்பெரிய சரிவு: பங்கு சந்தையே இதனால் ரத்தக்களரியாக அப்போது மாறியது. அதானி குழுமம் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய சரிவை கடந்த வருடம் சந்தித்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு குழுமத்தின் பங்கு 4 நாட்களில் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்ததே இல்லை.
குற்றச்சாட்டு: ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைதான் இந்த சரிவிற்கு எல்லாம் காரணம். அதில், அதானி நிறுவனம் தனது வருமானத்தை பொய்யாக உயர்த்தி காட்டி உள்ளது, உறவினர்களை பயன்படுத்தி போலியான நிறுவனங்களை வெளிநாட்டில் தொடங்கி போலி பரிவர்த்தனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பங்குகளை பொய்யாக உயர்த்தி அதை வைத்து கடனும் வாங்கி உள்ளது, அதாவது பொய்யாக கொண்டு வரப்பட்ட முதலீடுகள் மூலம் பொய்யாக உயர்த்தப்பட்ட பங்குகளை வைத்து கடன் வாங்கி உள்ளது. கையில் பணமே இல்லாமல் எல்லாம் பொய்யான முதலீடுகள் மூலம் வரவு செலவு இருப்பதாக காட்டி ஏமாற்றி உள்ளது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியது.
தனது வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது என்று புகார்களை அதானி குழுமம் மீது இந்த ஹிண்டர்ன்பர்க் வைத்தது. இதை அதானி குழுமம் மறுத்து இருந்தாலும், ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் தங்கள் ரிப்போர்ட்டில் உறுதியாக உள்ளது.
புதிய குற்றச்சாட்டு: இந்த விவகாரத்தில் அப்போது செபி பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்திலும் அதானிக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான், அமெரிக்காவைச் ஹிண்டன்பர்க் ரிசர்ச் இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளார். அதனால்தான் அதானி மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
அதாவது செபி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம். அதானி குழுமம் எந்த அச்சமும் இல்லாமல் பணிகளை செய்கிறது. இதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு இடையே உள்ள உறவே காரணம்.
தற்போதைய செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அதானியின் பங்குகளில் இவர்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளனர். அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என்று செபி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்று இதில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
மதாபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலில் சிங்கப்பூரில் ஜூன் 5, 2015 அன்று ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1 இல் தங்கள் கணக்கை தொடங்கி உள்ளனர். எங்களுக்கு கிடைத்த விசில்ப்ளோவர் ஆவணங்கள் மூலம் அந்த தம்பதியரின் நிகர மதிப்பு $10 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே பங்குகளில் அதானி குழுமமும் முதலீடுகளை செய்துள்ளது. செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர், என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை செபி மீது ஹிண்டன்பர்க் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
