Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் துப்பாக்கி சூடு.. அலறிய மக்கள்.. 10 பேர் பலி! அமெரிக்காவில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் பஃப்பல்லோ நகரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

18 வயது இளைஞர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 10 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டிற்கு இனவெறி காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளனர். இவரின் பெயர் பேய்டன் ஜென்ட்ரான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

எப்படி சுட்டார்

எப்படி சுட்டார்


இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கியால் சுட்ட இளைஞர், கவச உடை அணிந்து இருந்ததாகவும், மார்க்கெட் உள்ளே புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நியூயார்க் பகுதியில் இவர் வீடு உள்ளதாகவும், பஃப்பல்லோவிற்கு இவர் கார் மூலம் வந்து துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

பாவம்

பாவம்

இதற்காக இவர் 320 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து இருக்கிறார். கொல்லப்பட்டவர்களில் 8 பேர் கறுப்பினத்தவர்கள் என்றும், 2 பேர் வெள்ளையர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனவெறி காரணமாக துப்பாக்கி சூடு நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் 9 பேர் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள்.

துப்பாக்கி சண்டை

துப்பாக்கி சண்டை

இன்னொருவர் கடையின் பாதுகாவலர். இவர் முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட இளைஞரை அந்த பாதுகாலவர் பதிலுக்கு தாக்கி இருக்கிறார். இந்த துப்பாக்கி சண்டையில் அந்த பாதுகாவலர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர்களுக்கு இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இவர் மட்டும் இல்லை என்றால் இன்னும் பலர் பலியாகி இருக்க வாய்ப்பு உள்ளது.

 விசாரணை

விசாரணை

இதையடுத்து அங்கு உடனே போலீசார் வந்தவர். துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அந்த நபர், தனது கழுத்திலேயே துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொள்வேன் என்று மிரட்டினார். அவரிடம் நயமாக பேசிய போலீசார், துப்பாக்கியை கீழே போட வைத்து அவரை சரண் அடைய வைத்தனர். இதையடுத்து போலீசார் மூலம் அவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+