"அதை"ப் போய் கேக்கில் கலந்து.. சிந்தியா டீச்சர் பண்ண வேலையை பார்த்தீங்களா.. கருமம்!
கணவனின் விந்தணுக்களைவைத்து கப் கேக் தயார் செய்துள்ளார் ஒரு ஆசிரியை
நியூயார்க்: அமெரிக்காவில் ஒரு டீச்சர் செய்த காரியம் அடக் கருமமே என்று தலையில் அடித்துக் கொள்ளும்படி அமைந்துள்ளது... தன்னுடைய கணவரின் விந்தணுக்களை சேகரித்து, அதை கப் கேக்கில் ஊற்றி தனது மாணவர்களுக்கு சாப்பிட கொடுத்துள்ளார்.
படிக்கும்போதே வாந்தி எடுக்க வைக்கிறது இந்த டீச்சரம்மா செய்த இந்த அசிங்கமான வேலை... அந்தம்மாவின் பெயர் சிந்தியா பெர்கின்ஸ். வயசு 36 ஆகி விட்டது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள லிவிங்ஸ்டன் என்ற ஊரில்தான் இந்த டீச்சர் வசித்து வருகிறார்.
இவரது முன்னாள் கணவர் டென்னிஸ். இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்ந்தபோது செய்த செயல்கள்தான் இப்போது அமெரிக்காவையே அதிர வைத்துள்ளன.

கப் கேக்
அதாவது இந்த டீச்சர் என்ன செய்வாராம், தனது வகுப்பு பிள்ளைகளுக்கு அவ்வப்போது கேக் செய்து கொண்டு போய் கொடுப்பாராம். அப்படி கேக் செய்யும்போது தனது கணவரின் விந்தணுக்களை சேகரித்து அதை கேக்கில் கலந்து அந்த கேக்கை கொண்டு போய் பிள்ளைகளுக்குக் கொடுப்பாராம். இந்த விவகாரம் பின்னர் வெளியில் தெரிந்து போலீஸார் இந்த இருவரையும் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்தனர். பிறகு இருவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.

ஜெயில் தண்டனை
இருவர் மீதும் சுமார் 60க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை போலீஸார் சுமத்தியுள்ளனர். இந்த வழக்கில் இவர்களுக்கு தலா 41 ஆண்டுகள் வரை சிறைவாசம் கிடைக்கும் என்று தெரிகிறது. காரணம், மைனர் சிறுவர்களை செக்ஸ் ரீதியாக தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது புகார் பதிவாகியுள்ளது... இந்த நிலையில் டென்னிஸ் மீது ஆபாச வீடியோ எடுத்ததாகவும் 2 குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அந்த நேரத்தில் லிவிங்ஸ்டன் நகர ஷெரீப் அலுவலகத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவர்
கைதுக்குப் பிறகு சிந்தியா தனது டீச்சர் வேலையை விட்டு விட்டார், கணவரையும் டைவர்ஸ் செய்து விட்டார். முன்னதாக தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, இதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது என்று அடம் பிடித்து வந்தார்... ஆனால் பின்னர் தனது குற்றங்களை அவர் ஒத்துக் கொண்டார். இந்த டீச்சரம்மா மீது சிறார் பாலியல் கொடுமை, பாலியல் பலாத்காரம், உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை கோர்ட் சுமத்தியுள்ளது.

பலாத்கார புகார்கள்
சிந்தியா மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அவர் மீதான புகார்களை வைத்து பார்த்தால் எப்படியும் 72 வருஷம் வரை, ஜெயில் தண்டனை கிடைக்கலாம் என்கிறார்கள்.. ஆனால் அவருக்கு பாலியல் பலாத்கார புகார்கள் மீதான வழக்கில் 40 வருடமும், மற்ற குற்றங்களுக்கு 30 வருடமும் சிறைத் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள். இந்த இரு தண்டனைகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்படலாம் என்று வக்கீல்கள் சொல்கிறார்கள்... இப்போதைக்கு அமெரிக்கா முழுக்க இந்த டீச்சரம்மாவோட கருமம் பிடிச்ச வேலையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications