உடல் மெலிந்த சுனிதா..நாசா போட்ட வீடியோ..? வீட்டுக்கு வருவாரா வில்லியம்ஸ்.. ?
அமெரிக்கா: நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை பற்றி பலரும் கவலையை தெரிவித்து வருகின்றனர்.
நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என நெட்டிசன்கள் பலரும் கவலையடைந்துள்ள நிலையில் அவர் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடியோ பதிவு ஒன்றை நாச வெளியிட்டு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தப் பதிவில் அவர்கள் ஹாம் ரேடியோ மைக் வைத்து தங்களின் கருத்து பேசுகின்றனர். ஒருவர் பேசிய பின் மற்றொருவருக்கு ஒலிவாங்கியை நேரடியாகக் கொடுக்க முடியாது. ஏனெனில் அது விண்வெளி. புவி ஈர்ப்பு விசை அங்கே செயல்படாது. அதனால் அனைத்து பொருட்களும் காற்றில் மிதக்கும்.

சுதா தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியைச் சொன்ன பிறகு மைக்கை அப்படியே விடுகிறார். அது மிதக்கிறது. அதை ஒருவர் கையில் பிடித்து பின் பேச தொடங்குகிறார். இந்தக் குழுவினரின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது. ஆனாலும், கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் விண்வெளியில் வசித்து வருவதால் உடல்ரீதியாக சில பிரச்சினைகளை உருவாக்கலாம் என்று முன்பே மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்தக் காணொளிப் பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் சுனிதா முன்பைவிட பல மடங்கு உடல் எடை குறைந்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். அவர் முகத்தில் முன்பைப் போன்ற பொலிவு இல்லை என்றும் கவலையைப் பகிர்ந்து வருகின்றனர். சுனிதா இந்த வீடியோவில் சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்துள்ளார். உடன் உள்ள சக விண்வெளி வீரர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டா தொப்பையை அணிந்துள்ளனர். அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகப் பொருட்கள் அப்படியே மிதப்பதைக் காண முடிகிறது.
ஒரு காலத்தில் விண்வெளிக்குப் போய் குடியேறுவது மனிதனின் கனவாக இருந்தது. எலான் மஸ்க்கூட தனது ஓய்வைச் செவ்வாய்க் கிரகத்தில் கழிக்க இருப்பதாக ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், நிஜத்தில் இப்போது கடந்த ஆறுமாதமாக சுனிதா சிக்கிக் கொண்டு தவிப்பதைப் பார்த்த மக்கள் விண்வெளி கனவு பற்றி அச்சப்பட ஆரம்பித்துள்ளனர். சமூக ஊடகங்களில் சுனிதா அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர் பூமியில் கொண்டாட வேண்டும் என்றும் அதுவரை அவர் ஆரோக்கியமாக இருந்து பூமிக்குத் திரும்பவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருவதைப் பார்க்க முடிகிறது.
சுனிதா வில்லியம்ஸ் தனது சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் கடந்த ஜூன் மாதம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் எட்டு நாள் பயணமான விண்வெளிக்குச் சென்றார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக ஸ்டார்லைனரில் ஏற்பட்ட கோளாறு அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
கடந்த செப்டம்பரில் அதன் குழுவினர் இல்லாமல் விண்கலம் திரும்ப வேண்டிய கட்டாயத்தை ஏற்பட்டது. ஆகவே விண்வெளி வீரர்கள் சுற்றுப்பாதையில் சிக்கித் தவித்து வருகின்றனர். நாசா அவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வரும்2025 மார்ச் அல்லது ஏப்ரல் வரை அவர்கள் திரும்ப முடியாது நிலையே நீடித்து வருகிறது. ஆகவேதான் நெட்டிசன்கள் தங்களின் மனக் கவலையை நாசா வெளியிட்ட வீடியோவைக் கொண்டு வெளிப்படுத்திவருகின்றனர். முன்பே வில்லியம்ஸும் வில்மோரும் ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ-9 டிராகன் விண்கலத்தில் திரும்புவார்கள் என நாசா அறிவித்திருந்தது. முதலில் வரும் பிப்ரவரியில் அது நடக்கும் எனத் திட்டமிட்ட நிலையில், இந்தக் குழு பூமிக்கு திரும்புவது தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.
என்னதான் இந்த விண்வெளி வீரர்கள் தங்களின் மனதை தைரியப்படுத்திக் கொண்டு இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து முற்றிலும் மனிதர்கள் வாழ முடியாத ஒரு சூழலுக்குச் சிக்கிக் கொண்டே இருப்பது அவர்களின் மனநிலையைப் பாதிக்கலாம் என்றும் சமூக ஊடகங்களில் பலரும் சுட்டிக் காட்டி எழுதி வருகின்றனர். அந்தக் கற்பனைகளை எல்லாம் உடைத்துத் தள்ளி வில்லியம்ஸ் விரைவில் வீடு திரும்புவார் என்பதே இப்போது அவர் பேசியுள்ள காணொளியைப் பார்த்த பின்னர் நம்பிக்கை வேர் விடுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications