வட்டி விகிதத்தை 2வது முறையாக குறைத்த அமெரிக்கா.. மீண்டும் அதிரடியாக உயரப்போகும் தங்கம் விலை
நியூயார்க்: அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. நேற்று நடைபெற்ற நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. வட்டி விகிதங்கள் குறைப்பு அறிவிக்கும் போது அமெரிக்க டாலரில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் முதலீட்டாளர்களிடையே குறையும். இதனால் டாலரின் மதிப்பு பலவீனமடையும். இதனால் தங்கம் விலை மீண்டும் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. நேற்று நடைபெற்ற நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குறைப்புக்குப் பிறகு, ஃபெடரல் நிதிகளுக்கான இலக்கு விகிதம் 3.75% முதல் 4.00% ஆக உள்ளது. இது இந்த ஆண்டில் (2025) ஃபெடரல் ரிசர்வ் மேற்கொள்ளும் இரண்டாவது வட்டி விகிதக் குறைப்பாகும். இதற்கு முன் செப்டம்பர் 2025-லும் வட்டி குறைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், பலவீனமடைந்து வரும் வேலைவாய்ப்புச் சந்தை மற்றும் நிச்சயமற்ற பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டும் இந்தக் குறைப்பு எடுக்கப்பட்டிருக்றிது. எனினும், அடுத்த வட்டி குறைப்புக்கான முடிவுகள் எதுவும் நிச்சயமாக இல்லை என்றும் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுவாக அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் போது, அமெரிக்க டாலரில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் முதலீட்டாளர்களிடையே குறைந்து போகும். இதனால் டாலரின் மதிப்பு பலவீனமடைந்துவிடுவதும் இயல்பானது. அதேநேரம் தங்கம் பொதுவாக அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்யப்படுகிறது. எனவே டாலரின் மதிப்பு குறையும் போது, மற்ற நாடுகளின் நாணயங்களைக் கொண்டு தங்கத்தை வாங்குவது மலிவாகும். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்துவிடுவது வாடிக்கையாகும்.
அதேபோல் அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எப்போது எடுக்கும் என்றால், பொருளாதாரத்தில் உள்ள மந்தநிலை அல்லது நிச்சயமற்ற தன்மை காரணமாகவே எடுக்கும். அப்படியான சூழல் தான் இப்போது நிலவுகிறது.. அதனால் அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டியை குறைத்துள்ளது. இப்படியா ஒரு சூழ்நிலைகளில், முதலீட்டாளர்கள் பங்குகள் மற்றும் பிற அபாயகரமான சொத்துக்களை விட்டு வெளியேறி, தங்கம் போன்ற பாதுகாப்பான புகலிடச் சொத்துக்களில் முதலீடு செய்யவே விரும்புவார்கள். இது தங்கத்தின் தேவையை அதிகரித்து, விலையை உயர்த்தும். எனவே தங்கம் விலை மீண்டும் வழக்கம் போல் உயர அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் பொதுவாக இப்படியான சூழலில் முதலீட்டை திரும்ப பெற காரணமும் இருக்கிறது. ஏனெனில் வட்டி விகிதங்கள் குறையும்போது, அரசாங்கப் பத்திரங்கள் போன்ற வட்டி தரும் முதலீடுகளின் வருமானம் குறைந்துவிடும். அதேநேரம் தங்கம் எந்த வட்டியையும் தராது. ஆனால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது, வட்டி தராத தங்கத்தில் முதலீடு செய்வதால் ஏற்படும் நஷ்டம் குறைவு ஆகும். எனவே தான் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை ஆபத்தான காலத்தில் விருப்பமாக வைத்துள்ளார்கள். எனவே மீண்டும் தங்கம் விலை உயரவே அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications