அமெரிக்காவே அழிந்துவிடும்.. எல்லாம் காலி.. புலம்பி தள்ளிய டிரம்ப்.. இந்தியாவிடம் மோதி சிக்கிட்டாரே!
நியூயார்க்: அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அவரது நிர்வாகம் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டத்திற்கு புறம்பானது என்று பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டிரம்ப் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வரிகள் இல்லாவிட்டால் அமெரிக்கா "முற்றிலும் அழிந்துவிடும்" என்றும், அதன் இராணுவ பலம் உடனடியாக அழிந்துவிடும்.. அமெரிக்கா வளர இந்த வரிகள் அவசியம்" என்றும் அவர் எச்சரித்தார்.
டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில், இந்த விவகாரத்தில் "தீவிர இடதுசாரிக் குழுவைச் சேர்ந்த நீதிபதிகள் 7-4 என்ற கணக்கில் அளித்த தீர்ப்பை கடுமையாகச் சாடினார். அத்துடன், ஒரு ஜனநாயகக் கட்சி நீதிபதியை அவர் பாராட்டினார். அந்த நீதிபதி நமது நாட்டை காப்பாற்ற வாக்களித்தார் என்றும், அவருக்கு தைரியமும் நாட்டிற்கான மரியாதையும்" இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

"வரிகள் இல்லாவிட்டால், நாம் ஏற்கனவே ஈட்டியிருக்கும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் இல்லாமல் போனால், நமது நாடு முற்றிலும் அழிந்துவிடும், நமது இராணுவ பலம் உடனடியாக இல்லாமல் அழிந்துவிடும். அமெரிக்காவை பற்றி தீவிர இடதுசாரிக் குழுவைச் சேர்ந்த நீதிபதிகள் கவலைப்படவில்லை, ஆனால் ஒரு ஜனநாயகக் கட்சி நீதிபதி, அதுவும் ஒபாமா நியமித்தவர், உண்மையில் நமது நாட்டை காப்பாற்றும் வகையில் தீர்ப்பளித்தார். அவரது தைரியத்திற்காக அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன்! அவர் அமெரிக்காவை நேசிக்கிறார், மதிக்கிறார்" என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப் நிர்வாகம் விதித்த பல வரிகள் சட்டவிரோதமானது என பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்ததையடுத்து அமெரிக்க அதிபர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். நெருக்கடி கால அதிகாரங்களைப் பயன்படுத்தி இறக்குமதி வரிகளை விதிப்பதன் மூலம் அவர் தனது அதிகார வரம்பை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்று தெரிவித்துள்ளது.
டிரம்ப் இந்தியா வரிகள்
அதிபர் டிரம்ப் இந்தியா மீது கடுமையான வரிகளை விதித்த நிலையில், இந்த நிகழ்வு நடந்து உள்ளது. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியவில்லை, அமெரிக்காவின் வரி அழுத்தங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல், பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது, பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு இந்தியா வெளியேறிவிட்டது, என்று இந்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்த நிலையில்தான் இந்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் கார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவைத் தொடர்ந்து விமர்சிப்பதைத் "அரசியல் நாடகம், பொருளாதார யதார்த்தம் அல்ல" என்று கூறியுள்ளார்.
ரஷ்யா - இந்தியா எண்ணெய் வியாபாரம்
அதில், ரஷ்ய எண்ணெயை இந்தியா அதிக விலைக்கு வாங்குகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் ரஷ்யா மூலம் இந்தியா பெரிதாக பலன் அடையவில்லை. ரஷ்ய கச்சா எண்ணெய் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் உண்மையான சேமிப்பு ஆண்டுக்கு 2.5 பில்லியன் டாலர் மட்டுமே, 25 பில்லியன் டாலர் அல்ல என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவை சீண்டும் விதமாக டிரம்ப் தீவிரமாக செயல்படுத்துகிறார். ரஷ்யா எண்ணெய் மூலம் நாம் பெரிதாக பலன் அடையவில்லை. ஆனால் டிரம்ப் இதை இந்தியாவைத் தண்டிக்கும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். ரஷ்யன் கச்சா எண்ணெயின் கப்பல் போக்குவரத்து, காப்பீடு மற்றும் கலப்புச் செலவுகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்தியாவிற்கு ஒரு பீப்பாய்க்கு வெறும் $3-4 தள்ளுபடி மட்டுமே கிடைக்கிறது.
டிரம்ப் இதை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்த விரும்பினால், அவர் எந்த புள்ளிவிவரத்தையும் எடுக்கலாம். உண்மை என்னவென்றால், இந்தியா ரஷ்ய எண்ணெயை உலகளாவிய விலைக் கட்டுப்பாடு கட்டமைப்புக்குள் வாங்குகிறது. எந்த சர்வதேச ஒப்பந்தமும் மீறப்படவில்லை.
இதனால்தான், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியவில்லை, அமெரிக்காவின் வரி அழுத்தங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல், பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது, பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு இந்தியா வெளியேறிவிட்டது என்று என்று இந்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications