வேலைக்கு ஆகாத மிரட்டல்.. இந்தியாவிற்கு "இன்ட்ரஸ்ட்" இல்லை.. சட்டென அமெரிக்கா பல்டி.. நடந்தது என்ன?
நியூயார்க்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை உயர்த்த கூடாது என்று இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசி வந்த அமெரிக்கா தற்போது சட்டென பல்டி அடித்துள்ளது. இந்தியாவிடம் அமெரிக்கா திடீரென தன்மையாக பேச தொடங்கி உள்ளது. என்ன நடந்தது? அமெரிக்காவின் டாப் அதிகாரிகள் சிலர் பேசியது என்ன? என்று பார்க்கலாம்.
Recommended Video

அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார். ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை உருவாக்கிய மூளை இவருடையதுதான்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ் வர்தன் சந்திப்பு நடத்திய இவர்.. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் பற்றியும், அதன் வீரியம் பற்றியும் விளக்கமாக பேசினார்.

மிரட்டல்
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மிரட்டும் தொனியில் சில விஷயங்களை குறிப்பிட்டார். அதில் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது தவறு இல்லை. ஆனால் இதை அதிகரிக்க கூடாது. ரஷ்யாவை இந்தியா சார்ந்து இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்ட கூடாது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் நாடுகள் பின்விளைவுகளை சந்திக்கும்.

டாலர் வர்த்தகம்
டாலர் வர்த்தகத்தைதான் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும். ரூபிள் வர்த்தகத்திற்கு மாறும் முடிவை இந்த நாடுகள் எடுக்க கூடாது என்று விமர்சனம் செய்து இருந்தார். ரஷ்யாவிடம் கூடுதல் எண்ணெய்களை வாங்கும் திட்டத்தில் இந்தியா இருக்கும் நிலையிலும், ரூபிள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் திட்டத்தில் இந்தியா இருக்கும் நிலையில்தான் தலீப் சிங் இந்தியாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார்.

எச்சரிக்கை அமெரிக்கா
தலீப் சிங்கின் இந்த பேச்சிற்கு இந்தியாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூட.. ஐரோப்பாதான் அதிகமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது. அவர்களை எதுவும் சொல்லவில்லையே. நல்ல ஆபர் கிடைத்தால் நாங்கள் வாங்கவே செய்வோம் என்று கடுமையாக பதில் அளித்தார். இந்திய அமெரிக்கா உறவில் உக்ரைன் போரால் லேசான விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தலீப் சிங் அந்த விரிசலில் கடப்பாரையை விட்டு பெரிதாக்கிவிட்டு சென்று இருக்கிறார்.

பதிலடி
தலீப் சிங்கின் மிரட்டலை இந்தியா கடுமையாக எதிர்த்த நிலையில்தான் இந்தியாவை சமாதானப்படுத்தும் வகையில் வெள்ளை மாளிகை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி வெளியிட்ட செய்தி குறிப்பில், ரஷ்யாவிடம் இந்தியா தடையை மீறி வர்த்தகம் மேற்கொள்ளவில்லை. ரஷ்யாவின் சில ஏற்றுமதிக்கு தடைகள் போடப்படவில்லை. அதில்தான் இந்தியா வர்த்தகம் மேற்கொள்கிறது .

வெள்ளை மாளிகை
ரஷ்யாவிடம் இந்தியா ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் மட்டுமே எண்ணெய் வாங்குகிறது. அந்த எண்ணெய் வர்த்தகமும் தடைக்கு உள்ளே வரவில்லை. இந்தியா சென்ற தலீப் சிங், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் பற்றி அந்த நாட்டிடம் விளக்கம் அளித்தார். அதோடு இந்தியாவிற்கு உதவி செய்வதாக நாங்கள் உறுதி அளிக்கிறோம். இந்தியாவின் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இறங்கி வந்த அமெரிக்கா
இந்தியாவிற்கு எண்ணெய் வழங்க தயாராக இருக்கிறோம். ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எண்ணெய் தடை செய்யப்பட்டது அல்ல. அதோடு இது இந்தியாவின் தனிப்பட்ட முடிவு. ரஷ்யாவிடம் இந்தியா கூடுதல் எண்ணெய் வாங்கும் விருப்பத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு அந்த இன்ட்ரஸ்ட் இல்லை என்று தோன்றுகிறது. இந்தியாவிற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

என்ன நடந்தது?
முன்னதாக தலீப் சிங் ரஷ்யாவிடம் இந்தியா அதிக எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பாது என்று கூறிய நிலையில், தற்போது வெள்ளை மாளிகை கொஞ்சம் இறங்கி வந்து பேசி உள்ளது. ரஷ்யாவிடம் இந்தியா கூடுதல் எண்ணெய் வாங்கும் விருப்பத்தில் இல்லை என்றே தோன்றுகிறது என்று அமெரிக்கா தனது அழுத்தத்தை குறைத்து பேசி உள்ளது. இந்தியாவை மிரட்டுவதன் மூலம் இந்தியா ரஷ்யாவிடம் மேலும் நெருக்கம் அடையவே வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தியா மீதான மிரட்டல் வேலைக்கு ஆகவில்லை என்றதும் அமெரிக்கா கொஞ்சம் தன்மையாக பேச தொடங்கி உள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications