சூரிய கிரகணம்.. செவ்வாயிலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? வாவ் வீடியோ
நியூயார்க்: சூரிய கிரகணம் அறிவியலின் அற்புதமான ஒரு நிகழ்வு. பூமியிலிருந்து சூரிய கிரகணத்தை பார்க்கும் போது மிகவும் ரம்மியமாக இருக்கும். இதே செவ்வாய் கிரகத்திலிருந்து சூரிய கிரகணத்தை பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? இதற்கான விடையை நாசா விண்கலம் வீடியோவாக அனுப்பியுள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஒவ்வாரு நாகரீகத்திலும் சூரிய கிரகணம் குறித்து பல்வேறு கதைகள் இருக்கின்றன. ஆனால் சூரிய கிரகணங்கள் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவியிருக்கின்றன. உதாரணமாக கடந்த 1919ம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணம், ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடுக்கான முதல் ஆதாரத்தை வழங்கியது. இந்த கோட்பாட்டில், ஈர்ப்பு விசை ஒளியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐன்ஸ்டீன் கூறியிருந்தார்.

அதேபோல, சூரியனில் உள்ள கொரோனல் எனும் அமைப்பு குறித்து விஞ்ஞானிகள் கிரகணத்தை பார்த்துதான் தெரிந்துக்கொண்டார்கள். இந்த கொரோனல் அமைப்பிலிருந்து உருவாகும் சூரிய புயல் பூமிக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே இதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் பல்வேறு செயற்கைக்கோளை அனுப்பியுள்ளனர். இதற்கு காரணம் சூரிய கிரகணம்தான்.
வானில் பறக்கும் பலூன்களில் பயன்படுத்தப்படும் ஹீலியம் வாயுவை கண்டுபிடிக்கவும் சூரிய கிரகணம் உதவியுள்ளது. 1868ம் ஆண்டு சூரிய கிரகணத்தின்போது, சூரியனை சுற்றி வளையம் இருப்பதை விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர். அது ஹீலியத்தால் உருவானது என்பதையும் அப்போதுதான் கண்டுபிடித்தனர். மிகச்சரியாக சொல்வதெனில் ஹீலியம் எனும் ஒரு வாயு இருக்கிறது என்பதே அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர சூரியனின் மேற்பரப்பு, கிரகங்களின் இயக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள கிரகணம்தான் உதவியது.
BREAKING 🚨: NASA's Perseverance rover captures partial solar eclipse on Mars pic.twitter.com/eRMbXVQSY1
— Latest in space (@latestinspace) November 2, 2024
பூமியலிருந்து பார்க்கும் சூரிய கிரகத்திலேயே இவ்வளவு கண்டுபிடிக்க முடிகிறது எனில், செவ்வாய் கிரகத்திலிருந்து சூரிய கிரகத்தை பார்த்தால் இன்னும் அதிகமாக கண்டுபிடிக்கலாமே என்று நாசா யோசித்திருக்கிறது. எனவே செவ்வாய்க்கு அனுப்பிய பெர்செவரன்ஸ் ரோவர் மூலம் அங்கிருந்து சூரிய கிரகணத்தை வீடியோ எடுத்திருக்கிறது.
இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நமக்கு இருப்பதை போன்று செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நிலவுகள் இருக்கின்றன. ஒன்று ஃபோபஸ் மற்றொன்று டீமோன். இதில் ஃபோபஸ் நிலவு வெறும் 27 கி.மீ விட்டம்தான் இருக்கும். நமது நிலவை விட 157 மடங்கு சிறியது. எனவே சூரிய கிரகணத்தின்போது இது சூரியனை முழுமையாக மறைக்காது. ஆனாலும், கிரகணத்தை பார்ப்பதற்கு அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த ஃபோபஸ் நிலவு செவ்வாய் கிரகத்தை வெறும் 7.5 மணி நேரத்தில் சுற்றி வந்துவிடும். எனவே சூரிய கிரகணம் வெறும் 30 வினாடிகள் மட்டுமே நீடித்திருக்கிறது. இந்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications