“வைர மோதிரம்” முழு சூரிய கிரகணம்.. இன்று பார்த்தவர் தன் வாழ்நாளில் இன்னொரு முறை பார்க்கவே முடியாது!
நியூயார்க்: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் தற்போது நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணத்தை மக்கள் பார்த்துள்ளனர். சூரிய கிரகணத்தின்போது வைர மோதிரம் போல மின்னும் காட்சியை பலரும் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் நேற்று (ஏப்ரல் 8 ) நிகழத் தொடங்கியது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை ஏற்படுகின்றன. பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்துள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9:21 மணிக்கு தொடங்கிய நிலையில் அதிகாலை 2.22 மணிக்கு முடிவடைகிறது. இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 39 நிமிடங்கள். 11 மணிக்கு மேல் சூரிய கிரகணம் உச்சத்தில் இருந்தது.
கடந்த 1970ஆம் ஆண்டு இதே போன்ற முழுமையான சூரிய கிரகணம் தோன்றியது. 54 ஆண்டுகளுக்கு பிறகு முழு கிரகணமாக நிகழ்வதால் இந்த சூரிய கிரகணம் கவனம் பெற்றுள்ளது. இதன் பின்னர் வருகிற 2150ஆம் ஆண்டு தான் இத்தகைய முழு சூரிய கிரகணம் தோன்றும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று முழு சூரிய கிரகணத்தை பார்க்கும் ஒருவர் இனி இதேபோன்ற முழு சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு உயிரோடு இருக்க மாட்டார்.
இந்த முழு சூரிய கிரகணம் தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், தென் துருவம் ஆகிய பகுதிகளில் காணப்பட்டு வருகிறது. இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நடைபெறுவதால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை காண முடியவில்லை.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை மக்கள் முழுமையாக கண்டு ரசித்தனர். அமெரிக்க நேரப்படி மதியம் 1.59 மணிக்கு தொடங்கி பின்னர் பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் முழுவதும் ஆரம்பமானது. இது இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கி முழு கிரகணமாக 11 மணியளவில் வந்தது.

தொலைநோக்கிகள் மூலமாகவும், புற ஊதாக் கதிர்கள் ஊடுருவலைத் தடுக்கும் பாதுகாப்பு கண்ணாடிகள் அணிந்தும் ஏராளமானோர் இந்த சூரிய கிரகணத்தைக் கண்டுள்ளனர். பல பெற்றோர்கள், நாசாவின் பாதுகாப்பு கண்ணாடிகளுடன் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர். வகுப்புகளுக்கு நடுவே குழந்தைகள் தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்து சூரிய கிரகணத்தை பார்த்தனர்.
அமெரிக்காவில் டெக்சாஸ், மிசோரி, கெண்டக்கி, இந்தியானா, நியூயார்க், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் வசிக்கும் மக்கள் இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக பார்த்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாதுகாப்பு கண்ணாடி அணிந்தபடி சூரிய கிரகணத்தை பார்த்தார்.
Had the amazing opportunity to see the #TotalSolarEclipse2024 with the #diamondring formation. Such a surreal experience!!! Managed to shoot this with iPhone 😉#Eclipse2024 #NASA #SolarEclipse2024 #TotalSolarEclipse #TotalEclipse #Solar #sun #EclipseDay #EclipseDay2024 #America… pic.twitter.com/MTMGTLr7hw
— Raghu Rajaram (@RaghuTweetbook) April 8, 2024
அமெரிக்கா, மெச்சிகோவில் ஒரு வைர வளையம் போல சூரிய கிரகணம் நிகழத் தொடங்கி உச்சமடைந்தது. ஏராளமானோர், சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்ததோடு, புகைப்படம், வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications