ஷாக்! 20 ஆண்டு கால விசாரணை ஓவர்.. அமெரிக்காவை உலுக்கிய திருநங்கைக்கு.. முதன் முறையாக மரண தண்டனை!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவின் மிசிசிப்பி நதிக்கரையில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில் அப்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். உயிரிழந்த பெண்ணின் ஆண் நண்பர்களிடம் முதற்கட்ட விசாரணை தொடங்கியது.

ஆனால் அவர்களில் யாரும் இவரை கொலை செய்யவில்லை என்று தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணையை தீவிரமாக்கிய காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்ததில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தது தெரிய வந்தது. அந்த பெண் தொடர்பான தகவல்களை தேடி சென்றபோது அந்த பெண்மணி ஆம்பர் மெக்லாலின் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம்

குற்றம்

இதனையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆம்பர் மெக்லாலின் பிறப்பில் ஒரு ஆண் என்றும், அவர் நடுவில் திருநங்கையாக மாறிவிட்டார் என்றும் தெரிய வந்தது. மேலும், இவர் ஆணாக இருந்த போது இப்பெண்ணை காதலித்து வந்ததாகவும், பின்னர் தன்னுடைய உடல் மாற்றத்தைக் கண்டு அப்பெண் விலகி சென்றுவிட்டதால் ஆத்திரமடைந்த ஆம்பர் மெக்லாலின் எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்று யோசித்திருந்ததும் தெரிய வந்தது. இந்த பழி வாங்கும் உணர்வு காரணமாக இவர் தன்னுடைய காதலியை பின்தொடர்ந்து வந்து அவரை காரில் கடத்தி சென்றுள்ளார்.

மேல் முறையீடு

மேல் முறையீடு

பின்னர் மிசிசிப்பி நதிக்கரையில் வைத்து காதலியை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதனையடுத்து அவர் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைபற்றப்பட்டன. வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. ஆம்பர் மெக்லாலின் செய்தது கொடூரமான குற்றம் என்றும் எனவே இவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். ஆனால் தான் அப்பாவி என்றும், பல நேரங்களில் வாழ்க்கையில் ஏராளமான கொடுமைகளை சந்தித்து வந்துள்ளதாகவும் எனவே தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஆனால் நீதிபதி ஆம்பர் மெக்லாவின் வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

தண்டனை

தண்டனை

இறுதியாக இந்த குற்றத்திற்கு ஆம்பர் மெக்லாலினுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போதும் தனது தரப்பு வாதத்தை ஆம்பர் மெக்லாலின் நீதிமன்றத்தில் முன்வைத்தார். அதாவது, தான் தனது வளர்ப்பு தந்தை மூலம் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும், தன்னுடைய உடலின் மாற்றங்கள் ஏற்பட தொடங்கிய பின்னர் அவர்கள் தன்னை வீட்டிலிருந்து துரத்தி விட்டார்கள் என்றும் கூறினார். மட்டுமல்லாது, இந்த சமூகம் தன்னை புறக்கணித்ததால்தான் இப்படி கொலையாளியாக மாறிவிட்டதாகவும் கூறினார்.

முதல் முறை

முதல் முறை

ஆனால் இந்த முறையும் அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து நேற்று ஆம்பர் மெக்லாலினுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவருக்கு பென்டோபார்பிட்டலின் ரசாயனம் நிரப்பப்பட்ட ஊசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்னர் கடைசியாக "நான் தவறு செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் மரண தண்டணை 1970களில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை 1,558 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 17 பேர் பெண்கள். ஆனால் திருநங்கைக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+