டிரம்ப்தான் எதிரி நம்பர் 1.. மொத்தமாக தீர்த்து கட்ட பிளான் போடும் ஈரான்! இஸ்ரேல் ஷாக் ஸ்டேட்மெண்ட்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஈரான் முக்கிய எதிரியாக கருதுகிறது.. தங்களின் முதல் எதிரியாக கருதுகிறது.. இதனால் அவரை தீர்த்துக்கட்ட ஈரான் திட்டமிட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுத்ததில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார்.. அதனால் அவரை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக நெதன்யாகு தெரிவித்தார்.

Israel Iran

டிரம்ப் உயிருக்கு ஈரான் அச்சுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ கொலை செய்ய ஈரான் சதி செய்துள்ளது., டிரம்ப் ஈரானின் எதிரி எண் ஒன்றாக இருக்கிறது என்றும் நெதன்யாகு கூறினார்.

ஈரான், டிரம்ப்-பை கொலை செய்ய ஏற்கனவே முயன்றது என நெதன்யாகு தெரிவித்திருந்தார். "அவர்கள் டிரம்ப்பை கொல்ல விரும்புகிறார்கள். அவர் தான் எதிரி நம்பர் ஒன்.. அமெரிக்காவின் செயல்களை அவர்களை விரும்பவில்லை. அமெரிக்காவிற்கு மரணம் என்று முழக்கமிடும் இந்த மக்கள், அதிபர் டிரம்ப்பை இரண்டு முறை கொலை செய்ய முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. இனியும் அவர்கள் இதை செய்வார்கள்.

இப்படிப்பட்டவர்கள் கைகளில் அணு ஆயுதங்கள் சென்றால் எவ்வளவு மோசமாக இருக்கும். டிரம்ப் ஒரு தீர்க்கமான தலைவர். மற்றவர்கள் பலவீனமாக பேச்சுவார்த்தை நடத்தி யுரேனியத்தை செறிவூட்ட வழிவகுத்தனர். ஆனால் டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். காசெம் சோலைமானியை கொன்றார். நீங்கள் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது, அதாவது யுரேனியத்தை செறிவூட்ட முடியாது என்பதை தெளிவாக கூறினார். அவர் மிகவும் உறுதியானவர், அதனால்தான் டிரம்ப் அவர்களுக்கு எதிரி நம்பர் ஒன்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது. ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்க இஸ்ரேல் தயாராக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஈரான் முக்கிய எதிரியாக கருதுகிறது.. தங்களின் முதல் எதிரியாக கருதுகிறது.. இதனால் அவரை தீர்த்துக்கட்ட ஈரான் திட்டமிட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுத்ததில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார்.. அதனால் அவரை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம்

தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.

ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.

இதைத்தான் இஸ்ரேல் தாக்க முயற்சி செய்கிறது. நேற்று இதில்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை இஸ்ரேல் தாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான சீக்ரெட் திட்டங்களை இஸ்ரேலின் மொசாத் அமைப்பு மேற்கொண்டதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். ஈரான் உள்ளே அவர்களின் அணு திட்டங்களை சேதப்படுத்தும், தோல்வி அடைய செய்யும் பணிகளை இஸ்ரேல் தனது உளவாளிகள் மூலம் செய்ததாகவும்.. மொசாத் உதவியுடன் இந்த தாக்குதல்களை செய்ததாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+