திருநங்கைகளை ஆண்கள் சிறையில் அடைக்கும் அமெரிக்கா.. டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவால் அதிர்ச்சி
நியூயார்க்: அமெரிக்காவில் இனி ஆண், பெண் என்கிற இரண்டு பாலினங்கள்தான் அங்கீகரிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தனி சிறையில் உள்ள திருநங்கைகளை ஆண்கள் சிறையில் அடைக்கவும் ஆர்டர் போட்டியிருக்கிறார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரங்களின்போதே டிரம்ப் மாற்று பாலினத்தவர்கள் குறித்து பேசியிருந்தார். நான் ஆட்சிக்கு வந்தால், ஆண் மற்றும் பெண் என்கிற இரண்டு பாலினங்கள்தான் இருக்கும் என்று கூறியிருந்தார். அதபோல ஆட்சிக்கு வந்தவுடன், தற்போது திருநங்கைகளை ஆண்கள் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டிருக்கிறார். சுமார் 2500க்கும் அதிகமான திருநங்கைகள் அமெரிக்கா முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் ஆண்கள் சிறைக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.

டிரம்ப் பிறப்பித்த உத்தரவு சிறைதுறை மட்டுமல்லாது, பொது உரிமைகள் காப்பு, நிதி ஒதுக்கீடு, பாஸ்போர்ட், விசா சேவை உள்ளிட்டவற்றிலும் மாற்று பாலினத்தவர்களுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்தும். சர்வதேச அளவில் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் மாற்று பாலினம் குறித்து ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கூட மாற்று பாலினத்தவர்களுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உலகின் மிகவும் பலம் வாய்ந்த ஜனநாயக நாடாக கருத்தப்படும் அமெரிக்காவில் இதற்கு எதிர்ப்பு எழுந்திருப்பது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.
டிரம்ப்பின் உத்தரவால் தற்போது, அமெரிக்க ராணுவத்தில் உள்ள மாற்று பாலின வீரர்களும் விரைவில் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவ சேவையில் சுமார் 15,000 மாற்று பாலின வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களை அனைவரும் உடற்தகுதி நீக்கம் என்று முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது, இனி வரும் நாட்களில் LGBTQ+ சமூகத்தை சேர்ந்தவர்களை ராணுவத்தில் சேர்க்க தடையும் விதிக்கப்படும்.
கடந்த 2017-2021 காலத்தில் டிரம்ப் அதிபராக இருந்தபோதே இது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது இவ்வளவு கராறாக அமல்படுத்தப்படவில்லை. மட்டுமல்லாது, இவருக்கு அடுத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பைடன், டிரம்பின் உத்தரவை நீக்கி அதிரடி காட்டினார். டிரம்ப் கொண்டுவந்த ஏராளமான பழமைவாத உத்தரவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த முறை, தன்னுடைய உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் டிரம்ப் கவனமாக இருக்கிறார்.
பாலினம் குறித்த உத்தரவு மட்டும்தான் சர்ச்சையா? என்று கேட்டால் கிடையாது. வேறு சில உத்தரவுகளும் சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான குடியுரிமையை நீட்டிப்பதில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைபவர்களை அகதிகளாக நடத்தாமல், குற்றவாளிகளாக நடத்துவது, அதேபோல கல்விக்காக அமெரிக்கா வந்துள்ள மாணவர்கள், கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், தவிர பார்ட் டைம் வேலைகளில் ஈடுபட்டால் கல்விக்கான விசாவை ரத்து செய்வது என டிரம்ப் அதிரடிக்கு மேல், அதிரடி காட்டி வருகிறார்.
இப்படி இருக்கையில் திருநங்கைகள் குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவு சர்வதேச அளவில் விமர்சனங்களை பெற்று வருகிறது.
-
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications