சீண்டிய டிரம்ப்.. ஒதுக்கிய கனடா.. கண்டுக்காத ரஷ்யா.. உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்படுகிறதா?
சென்னை: உலக அரங்கில் இந்தியா ஒரு முக்கிய சக்தியாக இருக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புகிறது. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. பொருளாதார அளவிலும் இந்தியா உலகின் 4வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. ஆனால், அண்மையில் நடந்த சில நிகழ்வுகளும், உலக நாடுகளின் எதிர்வினைகளும் இந்தியா சர்வதேச அரசியலில் தனிமைப்படுத்தப்படுகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. உலகத் தலைவர்களின் நட்புறவற்ற கருத்துக்கள், முக்கியமான கூட்டங்களில் இருந்து இந்தியாவை விலக்கி வைப்பது போன்ற செயல்கள் மூலம் இந்த சந்தேகங்கள் எழுகின்றன.
டொனால்ட் டிரம்ப்பின் இந்தியா குறித்த கருத்துகள்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை கடுமையாக தாக்கி வருகிறார். அவர் சமீபத்தில் இந்தியா குறித்து சில எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்தார். அதாவது, இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் வர்த்தக ஒப்பந்தங்களில் அதிக பயன் பெறுகிறது என்றும், அதற்கு ஈடாக எதுவும் கொடுப்பதில்லை என்றும் கூறினார்.
முன்னதாக டிரம்ப், இந்தியாவையும் பிரதமர் மோடியையும் நல்ல நண்பர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் 2025-ல் அதிபரான பின் அப்படியே மாற்றி பேச தொடங்கி உள்ளார். இந்தியாவிற்கு எதிராக பேச தொடங்கி உள்ளார். சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்கிற்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் விடுத்த எச்சரிக்கையில், நேற்று டிம் குக் உடன் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டது. நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் என் ஃப்ரெண்ட், நான் உங்களை ரொம்ப நன்றாக நடத்துகிறேன். ஆனால் நீங்கள் பல பில்லியனை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இப்போ இந்தியா முழுக்க கட்டிடம் கட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை.
இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், நீங்க இந்தியாவில் கட்டிடம் கட்டலாம். ஆனால் நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்ட கூடாது. ஏனென்றால் இந்தியா உலகத்துலயே அதிக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அதனால் இந்தியாவில் உங்கள் பொருட்களை விற்பது ரொம்ப கஷ்டம். நீங்க பல வருஷமாக சீனாவில் கட்டிய எல்லா பிளாண்ட்களையும் நாங்க பொறுத்துக்கிறோம். ஆனால் இப்போது நீங்க இந்தியாவில் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும்.. நீங்கள் அமெரிக்காவை பாருங்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தியா தனது இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. 100% குறைக்கவில்லை என்றால் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறி உள்ளார். அவரது கருத்துக்கள் அமெரிக்கா-இந்திய உறவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஜி7 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுக்காத கனடா
ஜி7 என்பது உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் குழுவாகும். இந்தக் குழு முக்கியமான நாடுகளை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 மாநாட்டை கனடா நடத்துகிறது. ஆனால், முந்தைய ஆண்டுகளில் இந்தியாவை அழைத்திருந்தாலும், இந்த முறை இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
காலிஸ்தான் பிரிவினைவாதியின் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை. இந்தியாவை அழைக்காததன் மூலம், கனடா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ஜி 7 மாநாட்டிற்கு செல்லாததன் மூலம் இந்தியா சர்வதேச மேடையில் இருக்கும் வாய்ப்பை இழந்துள்ளது.
சீனாவிற்கு நெருக்கமாகும் வங்கதேசம்
இந்தியா, வங்கதேசத்தின் விடுதலைக்கு உதவியதில் இருந்து அந்நாட்டோடு நெருங்கிய உறவைக் கொண்டு இருந்தது. ஆனால், சமீப காலமாக வங்கதேசம் சீனாவுடன் வலுவான உறவை ஏற்படுத்தி வருகிறது.
சீனா வங்கதேசத்திற்கு பெரிய கடன்களைக் கொடுத்து, சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்களை உருவாக்க உதவி செய்கிறது. இந்தியாவைப் போலல்லாமல், சீனா உள்ளூர் அரசியலில் அதிகம் தலையிடுவதில்லை. இது வங்கதேசத்தில் சில அரசியல் தலைவர்களுக்கு விருப்பமானதாக உள்ளது. இதனால் வங்கதேசமும் சீனாவிற்கு நெருக்கமாகி வருகிறது.
திபெத்தின் மாறும் நிலை
இந்தியா நீண்ட காலமாக தலாய் லாமாவுக்கும், திபெத்திய அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஆனால், சீனா தற்போது திபெத்திய பகுதிகளில் தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. மேலும், உலகெங்கிலும் உள்ள திபெத்தியர்களுக்கு பணம், வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆகியவற்றை வழங்குவதில் சீனா கவனம் செலுத்துகிறது.
நாடுகடத்தப்பட்ட திபெத்திய தலைவர்கள் கூட சமீப காலமாக சீனாவிற்கு எதிராக பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். இதன் மூலம் திபெத் பிரச்சினை மீதான இந்தியாவின் பிடி தளர்ந்து வருகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. திபெத் சீனாவிற்கு நெருக்கம் ஆகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஷ்யா கைவிட்டது
அதிலும் இந்தியா பாகிஸ்தான் போர் சமயத்தில் ரஷ்யா நேரடியாக நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இந்தியாவிற்கு ஆதரவாக எதுவும் சொல்லவில்லை. ரஷ்யா என்று இல்லை இந்தியாவிற்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் எதுவுமே குரல் கொடுக்கவில்லை.
இந்தியாவின் தனிமை
டிரம்ப்பின் விமர்சனம், ஜி7 மாநாட்டில் புறக்கணிப்பு, சீனாவுடன் நெருக்கமாகும் வங்கதேசம், திபெத்தின் அமைதி, ரஷ்யாவின் செயல்பாடுகள் போன்ற சமீபத்திய நிகழ்வுகள், இந்தியா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதை உணர்த்துகின்றன.
இதற்கான சில காரணங்கள்:
இந்தியா சக்திவாய்ந்த உலக நாடுகளின் குழுக்களிடையே நடுநிலை வகிக்க முயற்சிப்பது, தனிமைப்படுத்தப்பட வழிவகுக்கும். அதாவது இந்தியா இன்னமும் அணிசேரா நாடாக இருப்பது சிக்கலாக மாறி உள்ளது.
உள்நாட்டுப் பிரச்சினைகளான பத்திரிகை சுதந்திரம் மற்றும் மதரீதியான பதட்டங்கள் வெளிநாடுகளில் இருந்து எதிர்மறையான கவனத்தை ஈர்த்துள்ளன. கனடா போன்றவை இதனால் எதிரி நாடுகளாக மாறி உள்ளன.
இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் முன்பு போல வலிமையாக இல்லை.
இந்தியா இப்போது என்ன செய்ய முடியும்?
பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு இன்னும் வலுவான உறவுகள் உள்ளன. இந்தியா முற்றிலும் தனிமைப்படுத்தப்படவில்லை. ஆனால், உலக அரங்கில் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள, இந்தியா:
அண்டை நாடுகளுடனும், உலக நாடுகளுடனும் நட்புறவை புதுப்பிக்க வேண்டும்.
சிறிய நாடுகளுடன் பணிவாகவும், ஒத்துழைப்புடனும் இருக்க வேண்டும்.
வெளியுறவு அமைச்சகம் போன்ற நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும். மேலும், சில உயர்மட்ட தலைவர்களை மட்டும் நம்பியிருக்கக் கூடாது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications